காஸா நகரில் தரைவழித் தாக்குதல் தொடக்கம் – நகரை முழுவதும் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காஸாவில் தரை வழித் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம்.எழுதியவர், டேவிட் க்ரிட்டன் & கேப்ரியலா போமிராய்பதவி, பிபிசி செய்தியாளர்15 நிமிடங்களுக்கு முன்னர்
காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தரைவழி தாக்குதலுக்கான முதற்கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அதன் புறநகர் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சைதூன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேலிய படைகள் ஏற்கனவே நுழைந்துவிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸின் ஒப்புதல்படி தாக்குதலுக்கான அடித்தளம் அமைப்பதே நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 ரிசர்வ் படையினர் வரவழைக்கப்படுகின்றனர். அதன்பின் தற்போது உள்ள படையினர் விடுவிக்கப்படவுள்ளனர்.
அப்பாவி மக்கள் மீது போர் தொடுப்பதற்காக இஸ்ரேல் சண்டை நிறுத்தத்தை தடுப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
காசா நகரை இஸ்ரேல் கைப்பற்றி வருவதால், லட்சக்கணக்கான பாலத்தீனர்கள் காசாவில் இருந்து வெளியேறி தெற்கு காசாவில் உள்ள முகாவிற்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இஸ்ரேலிய கூட்டாளிகள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது இருதரப்பு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும், மேலும் முழு பிராந்தியத்திலும் நிரந்தரமாக போர் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது.” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ராங் தெரிவித்துள்ளார்.
மேலும் இடம்பெயரும் சூழல், தீவிரமடையும் விரோதப் போக்கு ஆகியவை காஸாவின் 2.1 மில்லியன் மக்களுக்கு ஏற்கனவே பேரழிவு தரும் சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது” என சர்வதேச ரெட் கிராஸ் சங்கம் (ICRC) தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் சண்டை நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் உடனான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, முழு காஸா நகரையும் கைப்பற்றும் முடிவை அறிவித்தது இஸ்ரேல் அரசு.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, செப்டம்பரில் 60,000 ரிசர்வ் படையினர் வரவழைக்கப்படுகின்றனர்.நேற்று (ஆகஸ்ட் 21) தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின், “22 மாதப் போருக்குப் பிறகு ஹமாஸ் தாக்குதலுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காஸா நகரில் ஹமாஸுக்கு ஏற்படும் சேதத்தை நாங்கள் மேலும் ஆழப்படுத்துவோம் எனவும் நிலத்திற்கு மேலும், கீழும் பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு ஏற்படும் சேதத்தை நாங்கள் ஆழப்படுத்துவோம், மேலும் மக்கள் ஹமாஸைச் சார்ந்திருப்பதைத் துண்டிப்போம்.” எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்குதலை தொடங்க காத்திருக்கவில்லை என டெஃப்ரின் கூறினார்.
நாங்கள் ஏற்கனவே முதற்கட்ட தாக்குதலை தொடங்கிவிட்டோம். காஸாவின் புறநகர்ப் பகுதிகள் IDF கட்டுப்பாட்டுக்குள் உள்ளன”
சைதூன் சுற்றுப்புறத்தில் 2 படைப்பிரிவுகள் பதுங்கி தரைவழித் தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் இங்கு ஆயுதங்களுடன் கூடிய ஒரு சுரங்கப்பாதையை கண்டுபிடித்தனர். மேலும் மூன்றாவது படைப்பிரிவு ஜபாலியா பகுதியில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும் வகையில், காஸாவில் இருந்து அவர்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
சைதூன் மற்றும் சப்ரா சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலைமை மிகவும் ஆபத்தானது இருப்பதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் செவ்வாயன்று AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காஸாவின் புறநகர்ப் பகுதிகள் IDF கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக டெஃப்ரின் கூறினார்நேற்று இஸ்ரேலிய படை நடத்திய தாக்குதலில் இந்தப் பகுதியில் 25 பேர் உயிரிழந்ததாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. காசா நகருக்கு மேற்கே உள்ள ஷாதி அகதிகள் முகாமின் பத்ர் பகுதியில் உள்ள வீடு குண்டுவீச்சுக்கு உள்ளானதில் 3 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரும் இதில் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 50 பணையக்கைதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் IDF மேற்கொள்வதாக டெஃப்ரின் தெரிவித்தார். இதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்கள் இந்த தரைவழி தாக்குதலில் பாதிக்கப்படக்கூடும் என இவர்களின் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர்.
காசாவில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்தால், பாலத்தீன மக்கள் மற்றும் பணயக்கைதிகள் என இருவருக்கும் பேரழிவு ஏற்படும் என்று ICRC எச்சரித்தது.
“மாதக் கணக்கில் நடைபெறும் தொடர் விரோதப் போக்குகள், மற்றும் தொடர்ச்சியான இடப்பெயர்வுகள், ஆகியவற்றுக்குப் பின் காஸா மக்கள் சோர்வடைந்துள்ளனர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”அவர்களுக்குத் தேவையானது அதிக அழுத்தம் அல்ல, நிவாரணம். அதிக பயம் அல்ல, சுவாசிக்க ஒரு வாய்ப்பு. அவர்கள் கண்ணியமாக வாழ அத்தியாவசியமான உணவு, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பொருட்கள், சுத்தமான நீர் மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவைதான் என இந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் “ராணுவத்தின் இந்த கூடுதல் தாக்குதல், பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும், பல குடும்பங்களை பிரிக்கும், மனிதாபிமான நெருக்கடிக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பணையக்கைதிகளின் உயிரும் ஆபத்தில் வைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி சண்டை நிறுத்தத்தை கோரியுள்ளது. மேலும் காஸா முழுவதும் உடனடியாக மனிதாபிமான உதவிகளை தடையின்றியும் கொண்டு செல்லவும் வலியுறுத்தியுள்ளது.
கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் சண்டை நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சித்து வருகின்றன. 60 நாட்கள் சண்டை நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளில் பாதி பேரை விடுவிப்பதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளன. இதை திங்ட்கிழமையன்று ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காஸாவில் இதுவரை 62,122 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இது குறித்து இஸ்ரேல் எந்த அதிகாரப்பூர்வ பதிலையும் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் ஒரு விரிவான ஒப்பந்தத்தைக் கோருவதாகவும் , பாதி பேரை விடுதலை செய்யும் ஒப்பந்தத்தை இனி ஏற்கப்போவதில்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையன்று வலியுறுத்தினர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மத்தியஸ்தர்களின் சண்டை நிறுத்த முடிவை புறக்கணித்ததாகக் ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அவர் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் தடையாக இருப்பவர் என்றும் விமர்சித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
2023 அக்டோபர் 7ஆம் தேதியன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் ஒரு தாக்குதலை தொடங்கியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 251 பேர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
அப்பகுதியின் சுகாதாரத்துறை அமைச்சரின் கூற்றுப்படி, காஸாவில் இதுவரை 62,122 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமைச்சகத்தின் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மற்றும் புள்ளி விவரங்களை ஐ.நா மற்றும் பிற நாடுகள் மேற்கோள் காட்டுகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு