வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் 4 பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக செயலாளர் ஆ.சிறி அறிவித்துள்ளார்.
மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (குடிசார்), மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (மின்னியல்), மாகாண தொழில்நுட்பவியல் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (படவரைஞர்), வடக்கு மாகாண பொதுச்சேவையின் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை ஆகிய 4 பதவியணிகளுக்குமே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முழுமையான அறிவித்தல்கள் மற்றும் விண்ணப்பங்கள் என்பன www.np.gov.lk → Exam and Recruitment → Advertisement என்ற வடக்கு மாகாண
இணையத்தளத்தில்; பார்வையிட முடியுமென்பதுடன் தகைமையுடையவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.