Wednesday, August 20, 2025
Home கொழும்புஈஸ்டர் சூத்திரதாரி:அனைவரிற்கும் தெரியும்!!

ஈஸ்டர் சூத்திரதாரி:அனைவரிற்கும் தெரியும்!!

by ilankai
0 comments

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சி மாற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்  விசாரணை தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோன் அவரது வீட்டில்; கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவை இலக்கு வைத்தே குற்றச்சாட்டுக்களை  மைத்ரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.

அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்தவர் என்றும், ஆனால் அவரை அடைய முடியாது .அது எப்படி நடந்தது என்பது பற்றி நான் சிஐடியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளியிட முடியாது. மூளையாகச் செயல்படுபவரைக் கண்டுபிடிக்க அனைவரும் துடிக்கிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் – அது யார் என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். ஒவ்வொரு அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும், உளவுத்துறைக்கும் தெரியும். மூளையாகச் செயல்படுபவர் எங்கே இருக்கிறார் என்பதை நாம் சொல்ல முடியும் என்றாலும், அவர்களை நாம் எதிர்கொள்ள முடியாது, என்றும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

banner

You may also like