Wednesday, August 20, 2025
Home திருகோணமலைமைத்திரிபால சிறிசேன விடுவித்தார்!.

மைத்திரிபால சிறிசேன விடுவித்தார்!.

by ilankai
0 comments

முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த உலுகேதென்ன, கொழும்பில் கடத்தப்பட்டு கடத்தப்பட்ட 11 இளைஞர்களையும் திருகோணமலை நிலத்தடி முகாமில் இருந்ததை பார்வையிட்டுள்ளதாக தகவல் ஒன்றை சட்டத்தரணி அச்சலா செனவிரத்தின தெரிவித்துள்ளார்.

அன்றிருந்த கடற்படைத் தளபதி 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மேலே வராதப்படி செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

அத்தோடு முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேயகுணரத்தின சாட்சிகளை மறைக்க உதவி செய்தார்.

வழக்கு விசாரணையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரசாத் சந்தன எட்டியாரச்சியை வெளிநாடு அனுப்புவதற்கு பண உதவி செய்துள்ளதோடு அவரை கடற்படை தளபதி இருந்த அறையின் பக்கத்தில் தங்க வைத்துள்ளார்.

banner

இரண்டு வருடம் சாட்சியை வைத்திருந்து வழக்கை ஸ்தம்பிக்க முயற்சியெடுத்துள்ளார்.

அத்துடன் ரவீந்திர விஜேயகுணரத்தின கைது செய்யப்படவிருந்த சந்தர்ப்பத்தில் அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்துள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கடற்படை புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த காலப்பகுயில் இளைஞர்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை முகாமை கண்காணிப்பு செய்துள்ளார்.

2009 ஆம் ஆண்டின் பின் இருந்த அனைத்து ஜனாதிபதிகளையும் சந்திக்க பெற்றோர்கள் சார்பில் கடிதம் எழுதி சந்தர்ப்பம் கேட்ட போது எவ்வித சந்தர்ப்பமும் வழங்கவில்லை” எனவும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்தின தெரிவித்துள்ளார்.

You may also like