Wednesday, August 20, 2025
Home இலங்கைமனைவியை மீட்டுத் தாருங்கள்: கணவன் மின்கம்பத்தில் ஏறிப் போராட்டம்!

மனைவியை மீட்டுத் தாருங்கள்: கணவன் மின்கம்பத்தில் ஏறிப் போராட்டம்!

by ilankai
0 comments

வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்புவதற்கு உதவுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கம்பஹா- பேலியகொடயில் இச் ம்பவம் இடம்பெற்றது. 

இந்நிலையில் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர், குறித்த நபரை அதிகாரிகள் மின்கம்பத்தில் இருந்து மீட்டுள்ளனர். 

தீயணைப்புப் படையினருடன் இணைந்து, பொலிஸார் அந்த நபரை மின்சாரக் கம்பத்திலிருந்து இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

banner

பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த குறித்த பொதுமகன்,

தனது மூன்று குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக, தனது மனைவியை வெளிநாட்டிலிருந்து அழைத்து வர உதவுங்கள் என கோரியுள்ளார். 

அண்மைக்காலமாக நபர்கள் இவ்வாறான பாரிய மின்கம்பங்களில் ஏறி உயிர் ஆபத்து ஏற்படும் வகையில் தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

You may also like