வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று (புதன்கிழமை, ஜனவரி 21, 2026) கோலாகலமாக ஆரம்பமானது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும் இலங்கைக்கான பிரித்தானிய மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர்கள், யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, தென்னிந்தியாவுக்கான இலங்கைப் பிரதித் தூதுவர் ஆகியோர் பங்கேற்று சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளை உறுதிப்படுத்தினர். பிரதமரின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபை (BOI), ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) மற்றும் தேசிய தொழில் முயற்சி அதிகார சபை ஆகியவற்றின் தலைவர்கள் கலந்துகொண்டு முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கினர். வடக்கு மாகாணத்தில் உள்ள இயற்கை வளங்கள், மனித வளம் மற்றும் கடல்சார் வளங்களைப் பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல், ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதே இந்த உச்சிமாநாட்டின் பிரதான நோக்கமாகும். Tag Words: #NIS26 #JaffnaSummit #NorthernInvestment #SunilHandunnetti #SriLankaEconomy #InvestInJaffna #EconomicGrowth2026 #BOI #EDB #GlobalInvestors
வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு ஆரம்பம் – Global Tamil News
8