டிஸ்னி அனிமேஷன் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ரோஜர் அல்லர்ஸ், கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17, 2026) தனது 76-ஆவது வயதில் கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் ஒரு குறுகிய கால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ராப் மின்காஃப் (Rob Minkoff) உடன் இணைந்து இவர் இயக்கிய ‘தி லயன் கிங்’, உலக அளவில் அனிமேஷன் துறையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இத்திரைப்படம் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. டிஸ்னியின் மறுமலர்ச்சி காலத்தின் தூணாக விளங்கிய இவர், The Little Mermaid, Beauty and the Beast, மற்றும் Aladdin போன்ற காவியத் திரைப்படங்களில் ஸ்டோரிபோர்ட் கலைஞர் மற்றும் கதைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். ‘தி லயன் கிங்’ பிராட்வே மேடை நாடகத்தின் திரைக்கதையை எழுதியதற்காக இவர் டோனி (Tony Award) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். சோனி பிக்சர்ஸின் Open Season மற்றும் காலில் ஜிப்ரானின் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட The Prophet ஆகிய படங்களையும் இவர் இயக்கியுள்ளார். டிஸ்னி நிறுவனத்தின் சி.இ.ஓ பாப் இகர் (Bob Iger) அவருக்கு இரங்கல் தெரிவிக்கையில், “ரோஜர் அல்லர்ஸ் ஒரு ஆக்கப்பூர்வமான தொலைநோக்கு பார்வையாளர். அவரது படைப்புகள் பல தலைமுறைகளுக்கு டிஸ்னியின் புகழை நிலைநாட்டும்,” என்று புகழ்ந்துள்ளார். Tag Words: #RogerAllers #TheLion King #DisneyAnimation #RIPRogerAllers #AnimationLegend #LionKingDirector #DisneyRenaissance #CinemaNews2026
🦁 டிஸ்னி அனிமேஷன் உலகின் ஜாம்பவான் ரோஜர் அல்லர்ஸ் காலமானார் (1949–2026) – Global Tamil News
6
previous post