6
சந்திரசேகர் அச்சப்பட தேவையில்லை! தையிட்டியில் காணிகளை விடுவியுங்கள் என போராடுபவர்கள் யார் என்பதை அறிய புலனாய்வு பிரிவை ஏவி விட்டுள்ளதாக ஜனாதிபதி பயமுறுத்துவது மோசமான செயல் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அதேவேளை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் நாளில் தற்போதைய ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு வரலாம் என ஊடகவியலாளர் கேள்வியொன்றிற்கு எச்சரித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அமைச்சர் சந்திரசேகர் எனது பெயரை உச்சரிக்க அச்சப்பட தேவையில்லை. எனது பெயரை கூறியே கதைக்கலாம் எனவும் பதிலடி வழங்கியுள்ளார்.