தித்வா (Ditwah) புயல் பேரழிவிற்குப் பிறகு, இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் (Rebuilding Sri Lanka) அரசின் திட்டங்களில் மலையகத் தமிழ் மக்கள் திட்டமிட்ட முறையில் புறக்கணிக்கப்படுவதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பெர்ட்டிடம் (Remi Lambert) உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளார். அனுராதபுரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 50 இலட்சம் (5 Million) செலவில் வீடு கட்டித் தரும் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆரம்பித்து வைத்துள்ளார். ஆனால், இதே புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, கேகாலை போன்ற மாவட்டங்களில் வாழும் மலையக மக்களுக்கு இந்த நிதி மற்றும் காணி ஒதுக்கீட்டில் அரசு பாரபட்சம் காட்டுவதாகத் தூதுவரிடம் விளக்கப்பட்டது. மேலும் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றைக் கோரிய போதிலும், அது தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார். பிரான்ஸ் ஒரு முன்னணி ஐரோப்பிய ஒன்றிய நாடாக இருப்பதால், இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச்சலுகைக்கான நிபந்தனைகளில் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமைகளையும் உள்ளடக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இத்திட்டத்திலிருந்து எவ்விதம் விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்பதற்கான உண்மை ஆதாரங்களை மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் (பேராசிரியர் விஜயசந்திரன், பாரத் அருள்சாமி, புஷ்பநாதன்) ஆகியோாா் தூதுவரிடம் சமர்ப்பித்தனர். Tag Words: #ManoGanesan #SriLankaNews #MalaiyahaTamils #TPA #AnuraKumara #TitvaCyclone #FrenchAmbassador #HousingRights #RebuildingSriLanka #GSPPlus #EstateSector
மலையக காணி உரிமையை, ஜிஎஸ்பி வரி சலுகை நிபந்தனையாக, பிரான்ஸ் வைக்க வேண்டும் – Global Tamil News
5