ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனாயே தகைச்சி (Sanae Takaichi), பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள் அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து, முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்தப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். எதிர்வரும் வரும் ஜனவரி 23-ம் தேதி நாடாளுமன்றத்தின் கீழவை (Lower House) அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்படும். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8, 2026 அன்று பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “நான் பிரதமராகத் தொடரத் தகுதியானவளா என்பதை ஜப்பான் மக்களே தீர்மானிக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை என்னிடம் ஒப்படைக்கலாமா என்பதை மக்கள் நேரடியாகத் தீர்ப்பளிக்கட்டும்” என பிரதமர் தகைச்சி செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார். சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் இவருக்கு 60% முதல் 70% வரை செல்வாக்கு இருப்பதாகத் தெரிகிறது. இந்த மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் தனது ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கு (LDP) பெரும்பான்மையை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உணவுப் பொருட்களுக்கான 8% நுகர்வு வரியை (Consumption Tax) இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க அவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உலகத் தலைவர்களுடன் அண்மையில் ஆலோசனைகளை நடத்திய தகைச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அடுத்த பொதுத்தேர்தல் 2028-ல் தான் நடைபெற வேண்டும் என்றாலும், தற்போதைய அரசியல் சூழலைத் தனக்குச் சாதகமாக்க அவர் இந்த ‘ரிஸ்க்’ எடுத்துள்ளார். ஜப்பானின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் இத்தேர்தல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #JapanElection2026 #SanaeTakaichi #JapanPolitics #SnapElection #BreakingNews #InternationalPolitics #NHK #LDP #JapanNews #TamilNews #ஜப்பான் #தேர்தல்
ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு: முன்கூட்டியே பொதுத்தேர்தலை அறிவித்தார் பிரதமர் சனாயே தகைச்சி! – Global Tamil News
4