தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு- உப செயலாளராக கட்சியின் உறுப்பினர் ஜஸ்ரின் தெரிவு. by admin January 18, 2026 written by admin January 18, 2026 தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ (TELO) கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் செயலாளர்,துணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18) காலை கட்சியின் தலைவர்,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் என பலர் இடம் பெற்றது. இதன் பேகாது தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளர் தெரிவு இடம்பெற்றது. கட்சியின் முன்னாள் செயலாளரும்,மன்னார் நகர சபையின் தவிசாளருமான டானியல் வசந்தன் அதிகூடிய வாக்குகளினால் கட்டியின் மாவட்ட என செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் உப மாவட்ட செயலாளர் கட்சியின் உறுப்பினர் அருள்ராஜ் ஜஸ்ரின் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்களாக 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு- Global Tamil News
6