டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை! வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தனக்கு வழங்கப்பட்ட உயரிய ‘அமைதிக்கான நோபல் பரிசை’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்! இது உலகளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. உண்மையில் நோபல் பரிசை இப்படி கைமாற்ற முடியுமா? மரியாவுக்கு ஏன் நோபல் பரிசு காசா போன்ற போர்ச் சூழல் இல்லாத ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதற்காக இந்த அங்கீகாரம்? பல்வேறு தரப்பினரும் இந்தக் கேள்வியை எழுப்பி வருகின்றனர். டிரம்ப் மீது தனக்கிருக்கும் விசுவாசத்தைக் காட்ட மரியா செய்த இந்தச் செயல் ஒரு “ட்விஸ்ட்” ஆக மாறியுள்ளது. ஆல்ஃபிரட் நோபல்: டைனமைட்டைக் கண்டுபிடித்த இவர், தன் கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுவதைக் கண்டு வருந்தி, மனிதகுல முன்னேற்றத்திற்காகப் பாடுபடுபவர்களுக்குத் தனது சொத்தின் பெரும்பகுதியை பரிசாக அறிவித்தார். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம். இந்த துறைகளில் சாதனை பட்த்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 18 காரட் தங்கப் பதக்கம், தனித்துவமான நோபல் பட்டயம் மற்றும் சுமார் 11 லட்சம் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து நோபல் கமிட்டி கொடுத்த “அதிர்ச்சி” விளக்கம்! மரியா தனது பதக்கத்தை டிரம்பிடம் ஜனவரி 15-ல் ஒப்படைத்தார். ஆனால், இது குறித்து நோபல் கமிட்டி ஜனவரி 16-ல் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது: “நோபல் பரிசும், அதைப் பெற்றவரும் பிரிக்க முடியாதவர்கள். மரியா தனது தங்கப் பதக்கத்தை (பொருளை) யாருக்கு வேண்டுமானாலும் தானமாகக் கொடுக்கலாம். ஆனால், ‘நோபல் வெற்றியாளர்’ என்கிற பெருமை மரியாவுக்கு மட்டுமே சேரும்; அது டிரம்புக்குப் போகாது!” அதாவது, நோபல் பரிசை ரத்து செய்யவோ, பெயரை மாற்றவோ சட்டப்படி இடமில்லை என கமிட்டி கறாராகக் கூறிவிட்டது. டிரம்ப் நீண்ட காலமாக இந்த விருதிற்காகக் காத்திருக்கும் நிலையில், மரியாவின் இந்த முயற்சி டிரம்ப் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், கமிட்டியின் விளக்கம் ஒரு தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. இது போன்ற சுவாரஸ்யமான உலகச் செய்திகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்! இது பற்றிய உங்கள் கருத்து என்ன? டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமா? கீழே கமெண்ட் செய்யுங்கள்!
டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை! – Global Tamil News
4