டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச சிவப்பு வாரண்ட் (Red Warrant) பிறப்பிக்கப்பட்டு, துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பெண், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் இன்று இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவருடன் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மேலதிக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்டுள்ள பெண் (மேலனி டி சில்வா), தற்போதைய சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவின் மைத்துனி எனவும், அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பொறுப்பதிகாரியும், W15 ஹோட்டல் மீதான சட்டவிரோதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவருமான பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்சிலம் டி சில்வாவின் மனைவி ஆவார். இவர் அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கணக்கு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகள் இதுவரை முறையாகச் செயல்படுத்தப்படாமைக்கு, இவரின் செல்வாக்கே காரணம் எனப் பேசப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த நபர்களிடம் CID அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு வாரண்ட் (Red Notice) மூலம் தேடப்பட்டு வந்த, இலங்கையில் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் மற்றும் அரசாங்க நிதி மோசடி செய்த பெண் ஒருவர் இன்று (2026 ஜனவரி 16) அதிகாலை துபாயிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஏனைய இருவரின் விபரங்கள். கந்தானையைச் சேர்ந்த 30 வயது நபர்: இவர் 2025 ஜூலை 3ஆம் திகதி வாகனத்திற்குள் வைத்து ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர். எல்பிட்டியவைச் சேர்ந்த 52 வயது நபர்: உஸ்மங்கொட பகுதியை மையமாகக் கொண்டு இயங்கிய பல திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர். இலங்கை பொலிசாரின் வேண்டுகோளுக்கிணங்க, துபாய் மற்றும் அபுதாபி பொலிஸார் இவர்களைக் கைது செய்திருந்தனர். சர்வதேச நாடுகளுக்கிடையிலான நாடுகடத்தல் சட்டங்களின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் இவர்களைக் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் மூவரில் பெண் சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆண் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக களனி மற்றும் எல்பிட்டிய பிரிவு குற்றப்பலனாய்வு பணியகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸாரால் இதுவரை 95 சிவப்பு வாரண்டுகள் பெறப்பட்டுள்ள நிலையில், அதன் பயனாக 2024 இல் 10 பேரும், 2025 இல் 11 பேரும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLanka #PoliceNews #CrimeUpdate #Interpol #RedNotice #DubaiArrest #CID #Justice #PublicSafety #SriLankaPolice #LKA #BreakingNewsSriLanka #CrimeInvestigation#SriLanka #BreakingNews #CrimeInvestigation #CID #DubaiArrest #JusticeForSriLanka #LegalSystem #PoliceUpdate #SriLankaPolice #LegalNews #SriLankaPolitics #MelanieDeSilva #CurrentAffairsSL #LKA
🚨 டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! 🚨 – Global Tamil News
7
previous post