வீதியெங்கும் பேரூந்து மயம்!

by ilankai

தமிழ் மக்கள் தமது ஆட்சியில் நம்பிக்கை வைத்து திரள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரச்சாரங்களை முன்னெடுத்துவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற நிகழ்வுக்கு பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.நிகழ்வுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து மக்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்றைய தினம் தீவகத்தின் வேலணையிலும் இன்றைய தினம் தென்மராட்சியின் மீசாலையிலும் வீதியெங்கும் குவிந்திருந்த பேருந்துக்கள் பொதுமக்கள் வாகனங்கள் மூலம் ஏற்றிவரப்பட்டதை அம்பலப்படுத்தியிருப்பதாக அவதானிகள் பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.இதனிடையே  தமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனவும், அந்த நம்பிக்கையை சிதறடிக்கமாட்டோம் என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.ஆட்சி மாற்றம் ஒன்றை நாட்டு மக்கள் விரும்பியதாகவும் அதற்கு தமிழ் மக்களும் எம்மோடு கைகோர்த்து ஏற்படுத்திய அரசாங்கமே இன்று செயற்படுவதாகவும் இலங்கை ஜனாதிபதி; தெரிவித்துள்ளார்.

Related Posts