கம்பி வலையில் சிக்கிய சிறுத்தைக்குட்டி!
நாய் வேட்டைக்கு வந்த சிறுத்தை குட்டி ஒன்று பாதுகாப்பு கம்பி வலையில் சிக்கியுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவில் விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வலையில் சிறுத்தை குட்டி சிக்கியுள்ளது.
இரும்பு கம்பி வலையில் சிக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர் வலையில் சிக்கிய சிறுத்தை குட்டியை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.