மன்னார் மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களது எதிர்ப்பினை தாண்டி 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின்நிலையத்தை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பொங்கல் தினமான இன்று வியாழக்கிழமை திறந்துவைத்துள்ளார்.மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின் திட்டத்தின் கீழ், நாட்டின் வலுசக்தி வரலாற்றில் முதல் முறையாக, தலா 05 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட மிகப்பெரிய 04 காற்று விசையாழிகள் நிறுவப்பட்டுள்ளன.உள்நாட்டு நிறுவனம் ஒன்றினால் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதால், வெளிநாட்டு ஒப்பந்ததாரர்களுக்குச் செல்லும் பாரிய வெளிநாட்டுச் செலாவணியை நாட்டுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து காற்றாலை மின்நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இணைந்து கொண்ட ஜனாதிபதி, விசையாழிகளை இயக்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.வலு சக்தி அமைச்சர் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் தலைவர் காற்றாலை நிறுவனமான தென்னிலங்கை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ;நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மன்னாரில் சிங்கள முதலாளிக்கு காற்றாலை!
2
previous post