Tuesday, August 19, 2025
Home இலங்கைபாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சபாநாயகரின் அறிவிப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சபாநாயகரின் அறிவிப்பு

by ilankai
0 comments

பாதுகாப்பு பிரதி அமைச்சர்  அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 31 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று  உறுதிப்படுத்தினார்.

இந்த பிரேரணை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கையொப்பங்களுடன் ஆகஸ்ட் 12 ஆம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

banner

அதன்படி, சம்பந்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சேர்க்கப்பட்டுள்ள விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்காலத்தில் சபைக்கு அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

You may also like