முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஆகியோருக்கு எதிராக பிடியணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுரலியே ரத்தன தேரருக்கு எதிரான பிடியாணை உத்தரவினை நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் இன்று (18.08.25) பிறப்பித்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறே, துசித ஹல்லோலுவவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவின் (CCD) கோரிக்கையைத் தொடர்ந்து, அந்தந்த பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.