டிரம்ப் – ஜெலன்ஸ்கி சந்திப்பு யுக்ரேனின் எதிர்காலத்தை இறுதி செய்யுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா அதிபர் டிரம்பை இன்று சந்திக்கிறார் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி (கோப்புப் படம்) எழுதியவர், ஃப்ரான்க் கார்டனெர்பதவி, பிபிசி செய்தியாளர்18 ஆகஸ்ட் 2025, 06:39 GMT

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அலாஸ்காவில் நடந்த அமெரிக்க – ரஷ்ய அதிபர்கள் சந்திப்பைவிட, இன்று (ஆகஸ்ட் 17) வெள்ளை மாளிகையில் நடைபெறும் சந்திப்பு யுக்ரேனின் எதிர்காலத்திற்கும், ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானதாக அமையலாம்.

டிரம்பு – புதின் சந்திப்பு எந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ததாக தெரியவில்லை.

சண்டை நிறுத்தம் இல்லை, ஒப்பந்தம் இல்லை, எந்த பெரிய அறிவிப்பும் இல்லை.

உலகின் இரு மிகப்பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தத்தில் இருந்து யுக்ரேனும் ஐரோப்பாவும் விடுபடப் போகின்றனவா?

யுக்ரேனும் அதன் கூட்டாளிகளும் இதைத் தடுக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

வாஷிங்டனில் பிரிட்டிஷ் பிரதமர் சர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், ஜெர்மனி சான்சலர் மெர்ஸ் உள்ளிட்ட தலைவர்களும் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இருப்பதால், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஓவல் அலுவலகத்தில் நடந்த சந்திப்புபோல் ஆகாமல் இருக்கும்.

இவர்கள் டிரம்பிடம் 2 விஷயங்களை வலியுறுத்த உள்ளனர்: ஒன்று நேரடி தலையீடு இல்லாமல் யுக்ரேனில் அமைதி நிலவாது. மற்றொன்று, வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, யுக்ரேனும் ஐரோப்பாவும் ஒத்த கருத்துடன் இருப்பதை அதிபர் டிரம்ப் பார்க்க வேண்டும் என ஐரோப்பியத் தலைவர்கள் விரும்புகிறார்கள். புதினுடனான நெருக்கமான உறவால் ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்கும் நிலைக்கு அவர் தள்ளப்படாமல் இருப்பதிலும் இவர்கள் உறுதியாக உள்ளனர்.

இங்குதான் ஸ்டார்மரின் ராஜதந்திரங்கள் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) டிரம்ப் – புதின் சந்திப்பு நடைபெற்றது.யுக்ரேன் தற்போது கூறிவரும் “நேட்டோ ஆர்ட்டிகிள்-5 வகை” பாதுகாப்பை பெற முடிந்தால், அது எதிர்காலத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், அதன் மூலம் சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக, அதன் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் போதுமானதாக இருந்தால், அதுவே ஒரு வகையான வெற்றியாக இருக்கும்.

பாதுகாப்பு உத்தரவாதங்களுக்காக சில யுக்ரேன் நிலங்களை கைமாற்றும் திட்டம் குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் விவாதித்து வருவதாகத் தெரிகிறது.

ஆனால் இது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

போரை முடிவுக்கு கொண்டு வரும் அதேசமயம் நிலத்தை இழக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு யுக்ரேன் ஒப்புக்கொள்ளுமா? குறிப்பாக இந்த நிலத்தைக் காப்பதற்காகத்தானே ஆயிரக்கணக்கானோர் உயிரை விட்டுள்ளனர்.

ரஷ்யா இன்னும் ஆக்கிரமிக்காத டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் மீதமுள்ள 30% இடத்தை விட்டுக்கொடுக்கச் சொன்னால், அது யுக்ரேனுக்கு அதன் மேற்கு எல்லையை மேலும் பாதுகாப்பற்றதாக்கி விடுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போரை முடிவுக்கு கொண்டு வரும் அதேசமயம் நிலத்தை இழக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு யுக்ரேன் ஒப்புக்கொள்ளுமா?டிரம்பின் விருப்பத்திற்குரிய நபர்களில் ஸ்டார்மரும் ஒருவர். இன்னும் ஒரு மாதத்தில் டிரம்ப் லண்டன் செல்கிறார்.

இன்றைய சந்திப்பில் பங்கேற்கும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டேவையும் டிரம்புக்குப் பிடிக்கும். சில சமயங்களில் இவர் ‘டிரம்ப் விஷ்பரர்’ ( Trump Whisperer) என அழைக்கப்படுவார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு அதிபர் மக்ரோன் மீது பெரியளவில் உடன்பாடில்லை என்றே தெரிகிறது. அடுத்த ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கும் அவரது முடிவை வெள்ளை மாளிகை சமீபத்தில் கடுமையாக விமர்சித்தது.

யுக்ரேனில் அமைதி நிலவ ஏதாவது மாற்றம் தேவை.

சர்வதேச எல்லைகளை வலுக்கட்டாயமாக மாற்ற முடியாது என்று ஐரோப்பிய தலைவர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். அதிபர் ஜெலன்ஸ்கி நிலத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும், யுக்ரேனின் அரசியலமைப்பு அதைத் தடை செய்கிறது என்றும் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

ஆனால் ஏற்கனவே ரஷ்யப்படை 85% ஆக்கிரமித்துள்ள டான்பாஸ் பகுதி தங்களுக்கே வேண்டும் என்கிறார் புதின். க்ரைமியாவை திருப்பி ஒப்படைக்கும் எண்ணமும் அவருக்கு இல்லை.

இருப்பினும் முன்னாள் எஸ்டோனிய பிரதமரும், தற்போதேய ஐரோப்பிய உயர்மட்ட அதிகாரியுமான காஜா கல்லாஸ் ஒருமுறை என்னிடம் கூறியது போல, இந்தப் போரில் யுக்ரேனின் வெற்றி என்பது ஆக்கிரமிப்பு நிலங்களை மீண்டும் கைப்பற்றுவதைப் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஸ்டார்மரின் ‘விருப்பக் கூட்டணி’ என்ன ஆவது?

பல்லாயிரக்கணக்கான வீரர்களை அனுப்பும் முந்தைய திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இப்போது இது பாதுகாப்பை பற்றியது, அதேசமயத்தில் யுக்ரேன் தனது ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவது பற்றியதாகும்.

ஆனால் போர்க்களத்தில் அமைதி நிலைநாட்டப்படவில்லை என்றாலும் நாங்கள் ஆபத்தான எல்லையிலேயே இருக்கின்றோம்.

சண்டை நின்றதும், புதின் தனது ராணுவத்தை மறுசீரமைத்து அதிக ஆயுதங்களை உருவாக்குவார். ஒருவேளை 3 முதல் 4 ஆண்டுகளுக்குள், அதிக நிலத்தை அபகரிக்கும் நிலைக்கு வருவார் என நான் பேசிய ஒவ்வொரு ராணுவ நிபுணர்களும் நம்புகிறார்கள்.

அது நடந்தால், முன்னேறி வரும ரஷ்ய துருப்புகள் மீது முதல் ஏவுகணையை ஏவுவது ஒரு துணிச்சலான டைபூன் அல்லது எஃப்-35 விமானியாக இருப்பார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு