Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, வாக்குகளை திருடுவதாக தேர்தல் ஆணையத்தையும் பாஜக அரசாங்கத்தையும் குற்றம் சாட்டினார்19 நிமிடங்களுக்கு முன்னர்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்கள் இணைந்து பிகாரில் உள்ள சசாரமில் இருந்து ‘வாக்காளர் உரிமை யாத்திரை’யைத் தொடங்கினார்கள். பிகாரின் பேரணியில், தேர்தல் ஆணையம் ‘வாக்கு திருட்டு’ செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சசாரமில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் தேசியத் தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து ‘வாக்குகளைத் திருட’ செயல்படுவதாகவும், ‘பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது வாக்குகளைத் திருடுவதற்கான முயற்சி’ என்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொன்னது.
“சட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து உருவாகின்றன, எனவே அந்த அரசியல் கட்சிகளுக்கு இடையே தேர்தல் ஆணையம் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்?” என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து அரசியல் செய்வதாக என்று கூறிய அவர், “ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ தேர்தல் ஆணையத்திற்கு அனைவரும் சமம்” என்றும் அவர் கூறினார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
வாக்குத் திருட்டு என குற்றம் சுமத்தும் ராகுல் காந்தி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகிறார்.
தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பேசிய காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பில் நேரடியாக பதிலளிக்கப்படவில்லை என்று கூறியது.
பட மூலாதாரம், ANI
1. பீகார் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன்?
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை சசாரத்தில் நடைபெற்ற பேரணியில் பேசியபோது, பிகார் தேர்தலுக்கு சற்று முன்பு, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குரிமையைப் பறிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
“பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதன் மூலம், புதிய வாக்காளர்களைச் சேர்த்தும், பிற வாக்காளர்களைக் குறைத்தும், பிகார் தேர்தல் முடிவைத் திருட வேண்டும் என்பது அவர்கள் (பாஜக-ஆர்எஸ்எஸ்) செய்யும் சதியின் இறுதி குறிக்கோள். ஆனால், அவர்கள் இந்தத் தேர்தலைத் திருட நாங்கள் விடமாட்டோம்” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்தார்.
பிகாரில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை, திருடப்பட்டதாகவோ அல்லது அவசரமான முறையில் செய்யப்பட்டதாகவோ கூறி எதிர்க்கட்சியினர் குழப்பத்தை உண்டாக்குவதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “வாக்காளர் பட்டியலை எப்போது திருத்த வேண்டும்? தேர்தலுக்கு முன்பா அல்லது பின்பா? தேர்தலுக்கு முன் என்பதே வெளிப்படையான பதில். இதைச் சொல்வது தேர்தல் ஆணையம் இல்லை, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும் வாக்காளர் பட்டியலைத் திருத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. இது, தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ பொறுப்பு” என்று தெரிவித்தார்.
வெள்ளத்தால் பிகார் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் செயல்முறை ஏன் செய்யப்படுகிறது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது. இது தவிர, தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் பத்திரிகையாளர்கள் இதே கேள்வியை எழுப்பினார்கள்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், “பிகாரில் 2003ஆம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடத்தப்பட்டது. அப்போது அது வெற்றிகரமாக நடத்தப்பட்டது, இந்த முறையும் அது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது” என்று கூறியது.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.2. வாக்காளர் எண் (EPIC) பிரச்னை ஏன்?
வாக்காளர் எண் தொடர்பாக இரண்டு வகையான ‘பிரச்னைகளை’ தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது-
ஒருவாக்காளர் எண் – பல நபர்கள்
ஒரே நபர் – பல வாக்காளர் எண்கள்
நாட்டில் சுமார் மூன்று லட்சம் பேரின் வாக்காளர் எண்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. இதன் பிறகு, வாக்காளர் எண் ஒரே மாதிரியாக இல்லாதபடி அவர்களின் எண்கள் மாற்றப்பட்டன.
“ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களின் வாக்காளர் பட்டியலில் இருக்கும்போதும், அவரது வாக்காளர் எண் வேறுபட்டிருக்கும் போதும் இரண்டாவது வகை நகல் ஏற்படுகிறது. அதாவது, ஒரு நபர், பல வாக்காளர் எண்” என்று ஞானேஷ் குமார் கூறினார்.
ஒரு நபர் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டாலும், பழைய வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்காததால் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.
தனது செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான சில உதாரணங்களை அளித்த ராகுல் காந்தி, இதுபோன்ற வாக்காளர்களின் பெயர்களை பிற இடங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், “ஒரே பெயரில் பலர் இருப்பதால், ஒருவரின் வேண்டுகோளின் பேரில் தேர்தல் ஆணையத்தால் யாருடைய பெயரையும் நீக்க முடியாது. அதை அவசரமாகச் செய்ய முடியாது. ஒரு நபர் விரும்பினால், அவரே பெயரை நீக்கலாம் அல்லது சிறப்பு தீவிர திருத்த செயல்முறை (SIR) மூலம் அதை சரிசெய்யலாம்” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்3.’போலி வாக்காளர்கள் மற்றும் வீட்டு எண் பூஜ்ஜியம்’ குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன?
2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாகவும், இது பாரதிய ஜனதா கட்சிக்கு பயனளித்ததாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
அதிலும் குறிப்பாக, பெங்களூருவில் உள்ள மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், பல வாக்காளர் அடையாள அட்டைகளில் முகவரி போலியாக இருப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். போலி வாக்காளர்கள் (உதாரணமாக பல மாநிலங்களில் வாக்காளராகப் பதிவுசெய்யப்பட்ட ஒரே நபர்) மற்றும் தவறான முகவரிகள் (உதாரணமாக ஒரு சிறிய அறையில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள்) ஆகியவற்றிகான உதாரணங்களைக் கொடுத்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றது’ மற்றும் ‘பொறுப்பற்றது’ என்று கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ‘வாக்கு திருட்டு’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது கோடிக்கணக்கான வாக்காளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தேர்தல் பணியாளர்களின் நேர்மையின் மீதான தாக்குதல் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
மகாராஷ்டிராவில் வரைவுப் பட்டியல் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட போது, ஏன் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய தேர்தல் ஆணையம், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் தவறுகள் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறுகிறது.
வீட்டு எண்ணை பூஜ்ஜியம் என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டைப் பற்றி கூறிய தேர்தல் ஆணையம், “வீடு இல்லாதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால், அவர்கள் இரவில் தூங்க வரும் இடமே (சில நேரங்களில் சாலையோரங்களில் அல்லது சில நேரங்களில் பாலத்தின் கீழ்) அவர்களின் முகவரியாக பதிவு செய்யப்படும். அவர்களை போலி வாக்காளர்கள் என்று குறிப்பிட்டால், அது அந்த ஏழை சகோதர சகோதரிகள் மற்றும் வயதான வாக்காளர்களை கேலி செய்வதாக இருக்கும்” என்று பதிலளித்தது.
“கோடிக்கணக்கான மக்களின் வீடுகளின் எண்கள் பூஜ்ஜியமாக உள்ளன, ஏனெனில் பஞ்சாயத்து, நகராட்சி அவர்களுக்கு வீட்டு எண்ணை ஒதுக்கவில்லை. நகரங்களில் அங்கீகரிக்கப்படாத காலனிகள் உள்ளன, அங்கு அவர்களுக்கு வீட்டு எண் கிடைக்கவில்லை. அவர்கள் தங்கள் படிவத்தில் எந்த முகவரியை நிரப்புவார்கள்? தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, அத்தகைய வாக்காளர் யாராவது இருந்தால், தேர்தல் ஆணையம் அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு கற்பனை எண்ணை வழங்கவேண்டும். வீட்டு எண் இல்லாமல் கணினியில் ஒருவரின் முகவரியை நிரப்பும்போது, அது பூஜ்ஜியமாகத் தோன்றும்.”
ஒருவர் வாக்காளராக வேண்டுமானால், 18 வயது பூர்த்தியடைய வேண்டும், முகவரி மற்றும் குடியுரிமை தேவை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். 4. தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியிடம் மட்டுமே பிரமாணப் பத்திரம் கேட்பது ஏன்?
தேர்தல் ஆணையம் தன்னிடம் மட்டும் பிரமாணப் பத்திரத்தை கேட்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
பிகார் பேரணியிலும் ராகுல் காந்தி இந்தப் பிரச்னையை எழுப்பினார். “தேர்தல் ஆணையம் என்னிடம் மட்டுமே பிரமாணப் பத்திரம் கேட்டுள்ளது, வேறு யாரிடமும் கேட்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு, பாஜகவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியபோது, அவர்களிடமிருந்து பிரமாணப் பத்திரம் எதையும் கேட்கவில்லை. ஆனால் இப்போது என்னிடம் மட்டும், நான் வைத்திருக்கும் தரவு சரியானது என்று பிரமாணப் பத்திரம் கொடுக்கச் சொல்கிறார்கள். நான் கொடுக்கும் தரவு தேர்தல் ஆணையத்துடையது என்னும்போது, அவர்கள் ஏன் என்னிடமிருந்து பிரமாணப் பத்திரம் கேட்கிறார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி குற்றம் சாட்டும் பகுதியின் வாக்காளராக இல்லாததால், அவர் பிரமாணப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.
“முறைகேடுகள் பற்றிப் பேசும் ஒருவர், அந்த சட்டமன்றத் தொகுதியின் வாக்காளராக இல்லை என்றால், சட்டப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு சாட்சியாக உங்கள் புகாரை தாக்கல் செய்யலாம், வாக்காளர் பதிவு அதிகாரியிடம் ஒரு உறுதிமொழியையும் அளிக்க வேண்டும். அந்த உறுதிமொழி, நீங்கள் புகார் அளித்த நபரின் முன் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டம் பல ஆண்டுகள் பழமையானது, அனைவருக்கும் பொருந்தக்கூடியது” என்று ஞானேஷ் குமார் கூறினார்.
“பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வழியே கிடையாது. ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படாவிட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தம்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறுகிறார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்’வாக்குத் திருட்டு’ என்ற குற்றச்சாட்டு முடிவுக்கு வருமா?
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கூறியுள்ளார்.
“மகாதேவ்புராவில் நாங்கள் அம்பலப்படுத்திய ஒரு லட்சம் வாக்காளர்கள் குறித்து ஞானேஷ் குப்தா (தலைமை தேர்தல் ஆணையர்) பதில் ஏதேனும் அளித்தாரா? இல்லை” என்று பவன் கெரா கூறினார்.
“ஞானேஷ் குமார் எங்கள் கேள்விகளுக்கு இன்று () பதிலளிப்பார் என்று நம்பினோம்… அவர் பேசியது (பத்திரிகையாளர் சந்திப்பில்) பாஜக தலைவர் ஒருவர் பேசுவது போல் இருந்தது” என்று அவர் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பில் மூத்த பத்திரிகையாளர் பரஞ்சோய் குஹா டாகுர்தாவும் கலந்து கொண்டார். அவரின் கருத்துப்படி, தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை.
பிபிசியிடம் பேசிய பரஞ்சோய் குஹா டாகுர்தா, “பத்திரிகையாளர் சந்திப்பில் சில கேள்விகளுக்கு தெளிவாக பதிலளிக்கப்படவில்லை. உதாரணமாக, மகாராஷ்டிராவில் 40 லட்சம் புதியவர்களை சேர்த்தது உண்மையா என்ற என்னுடைய கேள்விக்கு, அப்போது யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று ஆணையம் கூறியது. மாநிலத்தின் மக்கள் தொகையைக் காட்டிலும் வாக்காளர் பட்டியலில் அதிகமான பெயர்கள் ஏன் இருந்தது எப்படி என்று நான் கேட்ட மற்றொரு கேள்விக்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை” என்றார்.
“இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை, எனவே எதிர்க்கட்சிகள் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டில் இருந்து இப்போதைக்கு பின்வாங்கப் போவதில்லை.”
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.குறைந்தபட்சம் பிகார் தேர்தல் வரை எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா குப்தா நம்புகிறார்.
“பிகார் வரைவுப் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கை, எதிர்க்கட்சிகள் இதை தொடர்ந்து ஒரு பிரச்னையாக மாற்றுகின்றன. இன்று (ஆகஸ்ட் 17) பிகாரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பேரணி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மகாராஷ்டிரா குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் இன்னும் அப்படியே உள்ளன. எனவே, தேர்தல் ஆணையம் என்ன சொன்னாலும், எதிர்க்கட்சிகள் பிகார் தேர்தலில் அதை நிச்சயமாக ஒரு பிரச்னையாக மாற்றும்” என்று ஸ்மிதா குப்தா கூறுகிறார்.
மூத்த பத்திரிகையாளர் பிரமோத் ஜோஷி, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ஒரு அமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான கேள்வியாகக் கருதுகிறார், எனவே இந்தப் பிரச்னை அவ்வளவு எளிதில் முடிவுக்கு வராது என்று கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய பிரமோத் ஜோஷி, “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கம் இரண்டிற்கும் எதிரானவை. தேர்தல் ஆணையம் மட்டுமே பதில்களை வழங்கியுள்ளது. ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் கூறுகிறது, ஆனால் ராகுல் காந்தி அவ்வாறு செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த விஷயமும் அரசியல் அடிப்படையிலேயே போராடப்படும், மேலும் இந்தியா கூட்டணி அவ்வளவு எளிதில் உடன்படாது” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் நேரம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது ஏன்?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மக்களவைத் தேர்தல்களிலும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களிலும் ‘வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான மோசடி’ நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதன்பின் கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. ‘வாக்குத் திருட்டுக்கு’ எதிராக இந்தியா கூட்டணி பிகாரில் பேரணி நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
“தேர்தல் ஆணையம் இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முன்வந்ததில்லை. இன்று, பிகாரில் இந்தியா கூட்டணி ஒரு பேரணியை நடத்திய சமயத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இன்னும் முக்கியமானது என்னவென்றால், இந்த மாதம் 14ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தை கடிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் இந்தப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இயந்திரம் படிக்கக்கூடிய தேடலை மக்கள் செய்யக்கூடிய வகையில் அதைக் கொடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது” என்று பரஞ்சோய் குஹா டாகுர்தா கூறுகிறார்.
இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் பதிலை அரசியல் சூழலில் பார்க்க வேண்டும் என்று பிரமோத் ஜோஷி நம்புகிறார்.
“நாம் நேரத்தைப் பற்றிப் பேசினால், தேர்தல் ஆணையத்தின் பதிலும் நிச்சயமாக அரசியல் சார்ந்ததுதான். ராகுல் காந்தி அல்லது அவரது கட்சி பிகாரில் இதை அரசியலாக்குவது போல, அதே தேதியில், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் சார்பாக தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது” என்று பிரமோத் ஜோஷி விளக்குகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு