யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் குடத்தனை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை சாவகச்சேரி காவற்துறையினர்  கைது செய்துள்ளனர்

சங்கானை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீடொன்றில் ஆட்கள் இல்லாத நேரம் உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட மின் சாதனங்களை திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டாரால் சாவகச்சேரி காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் திருட்டு சந்தேகநபர்கள் குடத்தனை பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருப்பதாக வந்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர், இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருட்டு போன தொலைக்காட்சி பெட்டி மின் கேத்தல் உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி காவல  நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.