இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், “அகன்று செல்” (Go Away) எனும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்கள் தலைமை தாங்கி, முச்சக்கர வண்டிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். செயற்திட்டத்தின் முக்கிய தொனிப்பொருளாக “அகன்று செல்” – போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையிலிருந்து சமூகத்தை விடுவிப்பதை இது குறிக்கிறது. போதைப்பொருள் தொடர்பான புகார்களை வழங்குவதற்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1818 என்ற இலக்கத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஊர் முழுவதும் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் இந்தச் செய்தியை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி ஆதரவு தெரிவித்தனர். Tag Words: #DrugFreeSri Lanka #1818Hotline #JaffnaNews #AnandaWijeyapala #GoAwayCampaign #PublicSecurity #TukTukAwareness #NPPGovernment #NorthernProvince
🚺 “அகன்று செல் “: போதைக்கு எதிரான விழிப்புணர்வு – Global Tamil News
5
previous post