தைப்பொங்கல் திருநாள் தமிழர்களின் மரபுவழிப் பெருவிழாவாக இருந்தாலும், இம்முறை மன்னார் மாவட்டத்தில் அந்த உற்சாகம் வியாபார ரீதியாகப் பிரதிபலிக்கவில்லை என்பது கவலைக்குரிய செய்தியாக உள்ளது. இயற்கைச் சீற்றங்களினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகள் மக்களின் கொள்வனவுச் சக்தியை வெகுவாகக் குறைத்துள்ளன. மன்னார் நகரில் பொங்கல் பொருட்களின் விற்பனை மந்தகதியில் காணப்படுவதுடன், வர்த்தக நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது அரிசி, பால், வெல்லம், கரும்பு, மஞ்சள் மற்றும் புதிய மண்பானைகள் போன்ற பொங்கல் அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை வாங்குவதற்கு மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் காரணமாக மன்னார் மாவட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களையும், சொத்துக்களையும் இழந்துள்ளனர். இந்தப் பொருளாதாரப் பின்னடைவே பண்டிகைக் கொண்டாட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வழமையாக பொங்கல் காலங்களில் அதிக லாபம் ஈட்டும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், இம்முறை முதலீடு செய்த பணத்தைக் கூடத் திரும்பப் பெற முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர். மகிழ்ச்சியான ஒரு பண்டிகைக் காலம், இயற்கை அனர்த்தத்தினால் மன்னார் மக்களுக்குச் சவாலான ஒரு காலப்பகுதியாக மாறியுள்ளது. Tag Words: #MannarNews #ThaiPongal2026 #FloodImpact #EconomicCrisis #SugarCane #SriLankaWeather #MarketReport #FarmersStruggle #NorthernSriLanka
🌾 மன்னாாில் களையிழந்த தைப்பொங்கல் வியாபாரம் – Global Tamil News
6