Wednesday, August 20, 2025
Home கிளிநொச்சிஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது தனக்கு தெரியாதாம்

ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது தனக்கு தெரியாதாம்

by ilankai
0 comments

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடாகும். எனவே,  நாம்  அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்

இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதே எமது  கட்சியின்

அரசியல் எழுச்சியை தடை  செய்ய வேண்டும் என்பதற்காகவே எனவே இச் சட்டத்தை பற்றி நாம் நன்கு அறிந்துள்ளோம் எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதே எமது அரசின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

banner

பயங்கரவாத தடுப்பு பிரிவு   ஊடகவியலாளர்கள் இன்றும் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்படும் சூழ் நிலைகள் தொடர்ந்து நிலவுகிறது இன்றும் முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்  இந்த நிலைமை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடாக காணப்படுகிறது என கேள்வி எழுப்பிய போது, 

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட விடயம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

You may also like