🚨 திருகோணமலை பதற்றம்: பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்! – Global Tamil News

by ilankai

திருகோணமலை பகுதியில் அனுமதியின்றி புத்தர் சிலை வைக்கப்பட்டமை மற்றும் அது தொடர்பான அமைதியற்ற சூழல் குறித்து கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 தேரர்களுக்கும், மேலும் 5 சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி, திருகோணமலை கடற்கரை பகுதியில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற முற்பட்டபோது காவற்துறையினருக்கும் அங்கு திரண்டிருந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குறித்த கட்டுமானங்கள் கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. சிலையை அகற்ற முயன்றபோது பிக்குகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னிலைப்படுத்தப்பட்ட 9 பேரையும் வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். #Trincomalee #BreakingNews #SriLanka #CourtNews #TrincoIncident #Police #LawAndOrder #LocalNews #TamilNews #திருகோணமலை #நீதிமன்றம் #விளக்கமறியல்

Related Posts