Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முன்னதாக இந்தியா மீது 50% வரி விதித்திருந்தார் டிரம்ப்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அலாஸ்காவில் டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. அதற்குப் பிறகான பேட்டியில் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது பற்றி மீண்டும் பேசியிருந்தார் டிரம்ப். இந்த நிலையில் இந்தியா மீது மீண்டும் வரிகள் விதிக்கப்படுமா என்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.
அலாஸ்காவில் நடைபெற்ற டிரம்ப்-புதின் சந்திப்பின் மீது தான் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கவனம் இருந்தது.
இந்த சந்திப்பில் ரஷ்யா- யுக்ரேன் போரில் சில ஆக்கப்பூர்வமான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு நடக்கவில்லை.
போர் நிறுத்தம் தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை அல்லது ஒப்பந்தம் தொடர்பாகவும் எந்த குறிப்பும் இல்லை.
அலாஸ்கா சந்திப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு தான், இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியா மீதான கூடுதல் வரிகள் அதிகரிக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அலாஸ்கா உச்சிமாநாட்டை வரவேற்ற இந்தியா ரஷ்யா-யுக்ரேன் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தது.
தற்போது டிரம்ப்-புதின் சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படாததால் இந்தியா மீதான டிரம்பின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்கிற கேள்வி தான் பலரிடமும் உள்ளது.
பட மூலாதாரம், MEAIndia
படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்அமெரிக்க வரிகளுக்கு பின் இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவது அதிகரிப்பா?
அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தைகள் பற்றி இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார்.
“அலாஸ்காவில் டிரம்ப்-புதின் இடையே நடைபெற்ற உச்சிமாநாட்டை இந்தியா வரவேற்கிறது. அமைதியை நோக்கிய அவர்களின் தலைமைத்துவம் மிகவும் பாராட்டுதலுக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்களை இந்தியா பாராட்டுகிறது. அடுத்தக்கட்ட நகர்வுகளை பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் மட்டுமே அடைய முடியும். யுக்ரேனில் நடைபெற்று வரும் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலகம் விரும்புகிறது.” என்றார்.
தான் விதித்த வரிகளால் இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா அதன் எண்ணெய்க்கான முக்கிய வாடிக்கையாளரை இழந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தின் 40 சதவிகிதத்தை இந்தியா வாங்கி வந்தது. நான் இப்போது இரண்டாம் கட்ட பொருளாதார தடைகளை விதித்தால் அது அவர்களுக்கு மோசமானதாக இருக்கும்” என டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்பின் இந்த கூற்றுக்கு இந்தியா தற்போது வரை எதிர்வினை ஆற்றவில்லை.
டிரம்பின் வரி அறிவிப்பை கடந்தும் ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவது நாள் ஒன்றுக்கு 2 மில்லியன் பேரல்கள் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் வரையில் இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெயில் 38% ரஷ்யாவிலிருந்து வருவதாக கப்லெர் என்ற சர்வதேச தரவுகள் மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் கூறுகிறது.
ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 16 லட்சம் பேரல்களாக இருந்த தினசரி இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் 20 லட்சம் பேரல்களாக அதிகரித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்ப் – மோதி (கோப்புப்படம்)டிரம்ப்-புதின் சந்திப்பிற்குப் பிறகு இந்தியா மீதான வரி என்ன?
ஆசிய நாடுகளிலே அதிகபட்சமாக இந்தியா மீது தான் 50% வரியை விதித்துள்ளார் டிரம்ப். இந்த வரி உயர்வு ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த வரி விகிதத்திற்கு இந்தியா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து யுரேனியம் மற்றும் உரங்கள் வாங்குகின்றன, இந்தியா மீது மட்டும் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என்று இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
அலாஸ்கா உச்சிமாநாட்டிற்குப் பிறகு இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க வரிகள் என்னவாக இருக்கும் என்பது கேள்வியாக உள்ளது..
இந்தியாவிற்கு நிவாரணம் கிடைக்கலாம் என்கிற மூலோபாய விவகார வல்லுநரான பிரம்மா செல்லானே.
“அலாஸ்கா பேச்சுவார்த்தை ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மீதான இரண்டாம் கட்ட தடைகளை டிரம்ப் மறுபரிசீலனை செய்ய தூண்டும். சீனா மீதான வரிகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் (டிரம்ப்), ‘இன்று நடந்த விஷயங்களுக்குப் பிறகு நாம் அதைப் பற்றி யோசிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன்’ எனத் தெரிவித்தார். இந்த கருத்தின்படி பார்த்தால், இந்தியா மீதான கூடுதல் 25% வரி உள்ளிட்ட இரண்டாம் கட்ட பொருளாதார தடைகளும் தள்ளி வைக்கப்படலாம்” என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார் பிரம்மா.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டிய பேசிய பிரம்மா, “இது அமெரிக்கா விதித்த காலக்கெடுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடக்க உள்ளது. இத்தகைய சூழலில் டிரம்ப், தான் பின்வாங்குவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
வாஷிங்டனைச் சார்ந்த வில்சன் சென்டரின் இயக்குநர் மைக்கேல் கூகல்மேன், அலாஸ்கா சந்திப்பிற்குப் பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் மேலும் கசப்படையலாம் எனத் தெரிவித்துள்ளார்.
“எந்த ஒப்பந்தமும் அறிவிக்கப்படாததால் சந்திப்பு நன்றாக நடைபெற்றதாகத் தெரியவில்லை. தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றங்கள் மேலும் அதிகரிக்கலாம்” என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில் இந்தியா மற்றும் சீனா வரிகள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், “நான் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து தான் அதைப்பற்றி யோசிக்க வேண்டும். தற்போது அதைப்பற்றி யோசிக்க வேண்டியதில்லை” எனத் தெரிவித்தார்.
ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அனுராதா சினோய் பிபிசியிடம் பேசுகையில், “கடந்த சில வருடங்களாக அமெரிக்கா உடனான உறவுகளை வலுப்படுத்த இந்தியா அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் எடுத்துள்ளது. பெருநிறுவனங்களை ஊக்குவிப்பதில் தொடங்கி வெளிநாடு வாழ் இந்தியர்கள் உறவு மற்றும் அமெரிக்காவில் மூலோபாய கூட்டணிகளை வலுப்படுத்துவது வரை இந்தியா செய்துள்ளது.”
“ஆனால் அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவு கொள்கை தெற்காசியாவில் அதன் ஏகாதிபத்திய நலன்களை திணிப்பதில் பிடிவாதமாக உள்ளது. தற்போது இந்தியா நான்காவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. ரஷ்யா மற்றும் இதர நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதால் இந்த விவகாரத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ரஷ்ய எண்ணெய் மீதான இந்தியாவின் சார்பு நிலை
ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று மீதான ஆய்விற்கான மையத்தின் (Center for Research on Energy and Clean Air) தரவுகளின் படி ஜூன் 2025-ல் சீனா, இந்தியா மற்றும் துருக்கி தான் ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடுகளாக உள்ளன. ஆனால் இந்தியா மீது தான் டிரம்ப் அதிகபட்ச வரிகளை விதித்துள்ளார்.
சீனா மீது 30 சதவிகிதம் மற்றும் துருக்கி மீது 15 சதவிகிதம் வரிகளை விதித்துள்ளது அமெரிக்கா. இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது அமெரிக்கா.
2024-இல் 18 சதவிகித இந்திய ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்குச் சென்றன. ஆனால் 50% வரியால் அமெரிக்க சந்தையில் இந்தியா அதன் போட்டியாளர்களை விடவும் பின்தங்கிவிடும்.
உதாரணத்திற்கு அமெரிக்க வர்த்தகத்தில் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு கணிசமான பங்கு உள்ளது. ஆனால் வங்கதேசம் மீது 20% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
உலகில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் 85% எண்ணெய் தேவை இறக்குமதி மூலமே நிவர்த்தி செய்யப்படுகிறது.
யுக்ரேன் போருக்கு முன்பாக இந்தியா தனது எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய கிழக்கு நாடுகளையே அதிகம் சார்ந்திருந்தது.
2017-18 நிதியாண்டில் இந்திய எண்ணெய் கொள்முதலில் ரஷ்யாவின் பங்கு 1.3% ஆக இருந்தது. ஆனால் யுக்ரேன் போருக்குப் பிறகு இந்த நிலைமை மாறிவிட்டது.
ரஷ்ய கச்சா எண்ணெயின் விலை சரிய அந்நாட்டிலிருந்து இந்தியா இறக்குமதி செய்வது அதிகரித்தது. 2024-25 நிதியாண்டில் இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 35% ஆக உள்ளது.
கச்சா எண்ணெயின் விலை மலிவாக உள்ளபோதிலும் டெல்லியில் கடந்த 17 மாதங்களாக பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு ரூ.94.7 என சீராக உள்ளது. அதாவது குறைவான விலையின் பலன் நுகர்வோரை சென்று சேரவில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு