Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்ப்பாணத்தில் நண்பி செய்த நம்பிக்கை துரோகத்தால் குடும்ப பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
உயிர்மாய்த்த பெண்ணின் நண்பி ஒருவர் , கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , தனது மகனின் திருமண செலவுக்கு என குடும்ப பெண்ணிடம் 25 பவுண் நகைகளை வாங்கி அடகு வைத்து பணத்தினை பெற்றுள்ளார்.
அந்நிலையில் , நீண்ட நாட்களாகியும் , அடகு வைத்த நகைகளை மீட்டு , கொடுக்காததால் , உயிர்மாய்த்த பெண் பல தடவைகள் தனது நண்பியிடம் , நகைகளை திருப்பி கேட்டு வந்துள்ளார்.
அவரும் நகையை மீட்டு கொடுக்காது தொடர்ச்சியாக ஏமாற்றி வந்த நிலையில் , கடும் விரக்தியில் இருந்த பெண் நேற்றைய தினம் சனிக்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் என மரண விசாரணைகளில் உயிர்மாய்த்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.