காணொளிக் குறிப்பு, ஆர்த்ரிட்டீஸை சமாளிக்க 100 கிலோ எடையைத் தூக்கும் 70 வயது பாட்டி.காணொளி: 105 கிலோ எடையை தூக்கும் 70 வயது பெண் – மூட்டு வலிக்காக ஜிம் சென்றவர் அசத்தல்

9 நிமிடங்களுக்கு முன்னர்

டெல்லியைச் சேர்ந்தவர் ரோஷ்னி தேவி சங்வான். அவருக்கு வயது 70. 2022இல் ஏற்பட்ட ஒரு முதுகுத்தண்டு காயத்திற்குப் பிறகு, ரோஷ்னிக்கு ஆர்த்ரிட்டீஸ் இருப்பது கண்டறியப்பட்டது. காயத்திற்குப் பிறகு, அவருக்கு பிசியோதெரபி தொடங்க அறிவுறுத்தப்பட்டது.

“ஆனால், பிசியோதெரபி நிரந்தர தீர்வாக இருக்காது எனக்கூறிய என் மகன், என்னை ஜிம்முக்கு செல்ல அறிவுறுத்தினான். இந்த வயதில் யாராவது ஜிம் செல்வார்களா? எனக் கேட்டேன். இப்போது என்னால் இப்போது, என்னால் 100-105 கிலோ வரை எடை தூக்க முடியும்.” என்கிறார் ரோஷ்னி.

ஜிம்மிற்குச் செல்வது தனது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் முதுமை தொடர்பான பிம்பங்களை எதிர்க்கவும் உதவியதாக அவர் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு