இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கடல் வழியாக தப்ப முயன்ற நிலையில்...

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தியவர்கள் கடல் வழியாக தப்ப முயன்ற நிலையில் கைது

by ilankai

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் நகைகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் கைதான இரு இலங்கையர்கள் , இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தப்பி வர முயன்ற நிலையில் கைதாகியுள்ளனர். அம்பாறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்த இருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு தங்க நகைகளை கடத்தி வந்தனர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு , சில காலங்களுக்கு பிணையில் முன்னர் விடுவிக்கப்பட்டனர். பிணையில் வெளியே வந்தவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இலங்கைக்கு கடல் வழியாக படகில் தப்பி வர முயன்ற வேளை இராமேஸ்வரம் பகுதியில் வைத்து க்யூ பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Posts