இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது

by ilankai

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து நெடுதீவுக்கு படகில் கடத்தி வந்த இளைஞர்கள் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புறாக்களை கடத்தி வந்த மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களால் கடத்தி வரப்பட்ட புறாக்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Related Posts