இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பாரதநாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.

சென்னையைச் சேர்ந்த ந்ரித்யக்ஷேத்ரா டான்ஸ் அகாடமி ஸ்ரீமதி சித்ரா முரளிதரன்,  சமர்ப்பணா அகாடமி பைன் ஆர்ட்ஸ் ஸ்ரீ ஸ்வாமிமலை கே. சுரேஷ் மற்றும் ஸ்ரீமதி துர்காதேவி சுரேஷ்  மற்றும் சித்ரமயா ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் ஸ்ரீமதி கிருஷ்ணப்ரியா ஜெயகர் ஆகியோரின் மாணவர்கள் நடனங்களை நிகழ்த்தினர்.

குறித்த நடன நிகழ்வில் இந்திய தேசியக் கொடியின் வரலாறு மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய காட்சியும் இடம் பெற்றது.

நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி , கடற்தொழில்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்; வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்; நாடாளுமன்ற உறுப்பினர்கள்; வடமாகாண செயலாளர் மூத்த அரச அதிகாரிகள்,  அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.