30 ஆண்டுகளாக பொங்கல் பொங்காத தமிழ் அரசியல் கைதிகள் வீட்டில் பொங்க அடுப்பை மூட்டி வைப்பாரா இலங்கை ஜனாதிபதியென கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் கைதிகளது விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு.போரின் வலிகளோடு வடுக்களை சுமந்து அடக்குமுறைக்குள் இன்றும் ஒடுக்கப்பட்டுக் கொண்டு மீள முடியா துயரில் இருப்பவர் வாழ்வு மகிழ்வோடு வாழ்வதாய் எண்ணவா அனுரவின் யாழ்ப்பாண பொங்கலென யாழ்.ஊடக அமையத்தில் அரசியல் கைதிகளது குடும்பங்கள் நடாத்திய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளன. ஒவ்வொரு ஆட்சியாளருடைய நிகழ்ச்சி நிரலிலும் பொங்கல்களில் மனமாற்றமில்லையாவென கேள்வி எழுப்பியுள்ளதுடன் நாடகம் வேண்டாம் நல்லுறவை கட்டியெழுப்ப எனவும் தெரிவித்துள்ளனர்.30 ஆண்டுகள் கடந்தும் இரும்புக் கரம் கொண்டு மூட்டிய சிறைக்குள் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் .உயிருடன் கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளை தெருத்தெருவாய் தேடியலையும் தாய்மாரின் கண்ணீருக்கு பதிலை சொல்லுங்கள்.இவற்றை முதலில் செய்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்துங்கள்.அதுவே தமிழர் தீர்விற்கான பேச்சுக்களிற்கான முன்னெடுப்பு எனவும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
வீடுகளில் பொங்கல் பொங்க அனுர தயாரா?
4
previous post