📚 கல்விச் சீர்திருத்தம்: அரசியல் லாபமல்ல, தேசத்தின் எதிர்காலம்! இலங்கையின் கல்வித் துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் தொடர்பாக இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் மிக முக்கியமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தொழில் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப, கல்வி கலைத்திட்டங்கள் 8 வருடங்களுக்கு ஒருமுறையாவது புதுப்பிக்கப்பட வேண்டும். இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான மாற்றங்கள் செய்யப்படாதது, மாணவர்களின் தர்க்கரீதியான சிந்தனை மற்றும் திறன் மேம்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பழைய கலைத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பொருத்தமான அறிவை வழங்குவதில் பெரும் தடையாக உள்ளன. கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் பல விமர்சனங்கள், விஞ்ஞான ரீதியானவை அல்ல; மாறாக அவை அரசியல் நோக்கங்களுக்காகவும் குறுகிய காலப் பிரபலத்திற்காகவும் செய்யப்படுபவை என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கல்வியை அரசியல் போர்க்களமாக மாற்றுவது நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கே இழைக்கப்படும் அநீதியாகும். “புதிய சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் தொழில்சார் ஆலோசனைகள் மூலம் இச்செயல்முறையை வலுப்படுத்த நாம் தயார்,” என கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வியை வெறும் அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல், ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதி நேர்மறையான அணுகுமுறையுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. #EducationReformSL #SLES #LankaEducation #FutureGeneration #SriLanka #EducationSystem #NationalResponsibility #StudentFuture #SriLankaNews #கல்விச்சீர்திருத்தம் #இலங்கை
🔴 இந்தச் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து குறித்த சங்கம் முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. – Global Tamil News
7