Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6 .15 மணிக்கு
மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அன்றாடி,காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க, ரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் அன்ரன் வைமன் குரூஸ்,மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை,மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர். திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச் சொரூப பவனியும் திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் போது அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள்,
அரசியல் பிரமுகர்கள், ,அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் உள்ளடங்களாக பல்லாயிரண் கணக்கானோா் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.