உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) மீது மீண்டும் ஒருமுறை ரஷ்யாவின் டிரோன் படைகள் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளன. மக்கள் கடும் குளிரில் தவித்து வரும் நிலையில், நகரின் மிக முக்கியமான எரிசக்தி கட்டமைப்புகளை (Energy Infrastructure) குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. 🔴 ட்ரோன் தாக்குதல்களால் கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவசரகால மின்வெட்டு (Emergency Blackouts) அமல்படுத்தப்பட்டுள்ளது. வெப்பமூட்டி (Heating) இன்றி மக்கள் தவிப்பு: தாக்குதல்கள் காரணமாக பல வீடுகளில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் குளிரில் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு வெப்பநிலை 5°F (-15°C) க்கும் குறைவாகச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளதால், மின்சாரம் மற்றும் ஹீட்டர்கள் இன்றி மக்கள் உயிருக்கே ஆபத்தான நிலையில் உள்ளனர். ⚖️ உறைபனிக் காலத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி மக்கள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் ,தனால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பழுதுபார்க்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தாலும், தொடர் தாக்குதல்கள் மீட்புப் பணிகளுக்குச் சவாலாக உள்ளன. #Kyiv #Ukraine #EnergyCrisis #DroneAttack #KyivAttacks #HumanitarianCrisis #WinterWar #KyivUnderFire #ElectricityBlackout #GlobalNews #StayStrongKyiv #உக்ரைன் #கீவ் #மின்வெட்டு #ட்ரோன்தாக்குதல்
❄️ உறைபனியில் தவிக்கும் கீவ்: எரிசக்தி கட்டமைப்புகள் மீது தீவிர ட்ரோன் தாக்குதல்! – Global Tamil News
6