இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இணையவழி மிரட்டல் (Cyber Extortion) மற்றும் அந்தரங்க வீடியோக்களைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடிகள் குறித்து காலி குற்றப் புலனாய்வுத் துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனிநபர்களின் அந்தரங்கக் காட்சிகளை நவீனத் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் திருட்டாகப் பதிவு செய்து, அவர்களை அச்சுறுத்தும் கும்பல்கள் தொடர்பில் காவல்துறையினா் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனா். காலி தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி கே.கே.ஆர். அல்விஸ் இது குறித்து முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். குற்றவாளிகள் மிகச்சிறிய மற்றும் மேம்பட்ட கமராக்களை சட்டைக் கொ லர்கள் பேனாக்கள், விடுதிகளின் (Lodges) படுக்கை அறைகள் மற்றும் குளியலறைகள் போன்ற இடங்களில் மறைத்து வைத்து வீடியோக்களைப் பதிவு செய்கின்றனர். அண்மையில் 45 வயதுடைய பெண் ஒருவர், தனது காதலன் (பேக்கரி ஊழியர்) தங்களின் அந்தரங்கக் காட்சிகளை இரகசியமாகப் பதிவு செய்து, பணத்திற்காக மிரட்டுவதாகப் புகார் அளித்துள்ளார். அதேபோன்று நோய்வாய்ப்பட்ட குழந்தையைக் குணப்படுத்துவதாகக் கூறி வீட்டிற்கு வந்த ஒரு பேய் விரட்டுபவர், ‘தீய சக்திகளை அகற்ற சடங்கு செய்ய வேண்டும்’ என அப்பெண்ணை ஏமாற்றி வன்புணா்வுக்குட்படுத்தி அதனை இரகசியமாக வீடியோ எடுத்து இப்போது மிரட்டி வருகிறார். எனவே பெண்கள் புதிய காதலர்கள் அல்லது அறிமுகமில்லாத நபர்களுடன் தனிமையான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் விடுதிகளில் தங்கும் போது அங்குக் கண்ணுக்குத் தெரியாத சிறிய கமராக்கள் (Hidden Cameras) இருக்கிறதா என்பதைச் சோதிக்க வேண்டும் எனவும் காவல்துறையினா் எச்சாிககை விடுத்துள்ளனா். எவர் ஒருவரிடமும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அந்தரங்கப் புகைப்படங்களையோ வீடியோக்களையோ பகிர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது Tag Words: #CyberCrimeSriLanka #GallePolice #HiddenCameraAlert #PrivacyProtection #SrilankaSafety #CyberExtortion #WomensSafety #StaySafeOnline
🚨 அந்தரங்க வீடியோக்களைப் பதிவிட்டு இணையவழி மிரட்டல் அதிகாிப்பு : – Global Tamil News
8