யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சிவில் நிர்வாகம் தொடர்பான முக்கிய ஒருங்கிணைப்புச் சந்திப்பு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் காவல்துறையின் நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்புகள் குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. இச்சந்திப்பில் யாழ். மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், வட மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் புத்திக்க சிறிவர்த்தன, யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஜே. ஏ. சந்திரசேன, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜீ. பி. ஜெயமஹ, யாழ்ப்பாண காவல்துறை லைமைப்பீட அதிகாரி பாலித செனவிரத்ன ஆகியோா் கலந்து கொண்டனா். இச்சந்திப்பின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், பின்வரும் விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிகிறது: வடக்கில் அச்சுறுத்தலாக உள்ள போதைப்பொருள் விநியோகத்தை ஒடுக்குவதற்கு காவல்துறையினரும் சிவில் நிர்வாகமும் இணைந்து செயற்படுதல், எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளவுள்ள பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் , மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் குறைத்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் , மாவட்டச் செயலகத்தின் கீழ் வரும் கிராமிய மட்டத்திலான நிர்வாகப் பணிகளுக்கு காவல்துறை பாதுகாப்பை வழங்குதல் என்பன ஆகும் Tag Words: #JaffnaNews #PoliceAdministration #DistrictSecretariat #NorthernProvince #SecurityMeeting #LawAndOrder #JaffnaPolice #MaruthalingamPratheepan #DIGSiriwardena
🤝 யாழ் மாவட்ட செயலரை சந்தித்த காவல்துறை அதிகாரிகள் – Global Tamil News
5