Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காணொளிக் குறிப்பு, பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மக்களை இரண்டு நாடுகளாக பிரிக்கும் பொறுப்பு ராட்க்ளிஃப்-க்கு கொடுக்கப்பட்டது.காணொளி: சுதந்திரத்துக்கு 37 நாட்களுக்கு முன்பு வந்து இந்தியாவை பிரித்த ராட்க்ளிஃப் யார்?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியாவின் சுதந்திரத்திற்கு சரியாக 37 நாட்களுக்கு முன் முதன்முறையா இந்தியா வந்த ஒருவரால், இந்தியா இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா?
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, பிரிட்டனிடம் இருந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது இந்தியாவை இரண்டாக பிரிக்க ஒரு கோடு வரையப்பட்டது. அந்த கோடுதான் ராட்கிளிஃப் கோடு (Radcliffe Line). இதை உருவாக்கிய சிரில் ராட்க்ளிஃப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மக்களை இரண்டு நாடுகளாக பிரிக்கும் பொறுப்பு ராட்க்ளிஃப்-க்கு கொடுக்கப்பட்டது.
சிரில் ராட்க்ளிஃப் பிரிட்டனைச் சேர்ந்த வழக்கறிஞர். அவர் 1947 ஜூலை 7ம் தேதிதான் இந்தியாவுக்கு முதல்முறையாக வந்தார்.
அவரிடம் இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டபோது, இந்தியாவின் சமூக மற்றும் மத அமைப்பு பற்றி ராட்க்ளிஃப்-க்கு எதுவுமே தெரியாது என சிலர் விமர்சித்தனர். அதே சமயம், அதனால் தான் அவரால் பாகுபாடற்ற ஒரு முடிவை எடுக்க முடிந்ததாக வேறு சிலர் வாதிட்டனர்.
பூகோளரீதியாக முதல் கோடு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சம அளவில் இருந்த பெங்கால் மற்றும் பஞ்சாபில்தான் வரையப்பட்டது. சிரில் ராட்க்ளிஃப்-ன் இந்த முடிவு, இரண்டு நாட்களில் அறிவிக்கப்பட்டது. ஒரு தரவின்படி, ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ராட்க்ளிஃப் வரைந்த இந்த கோட்டினால் இடம்பெயர்ந்தனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அவர் 2,900 கிமீ எல்லையை உருவாக்கினார். இந்த எல்லைதான் இப்போது வரை இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றத்திற்கு காரணமாக உள்ளது.
தான் வந்த வேலையை முடித்ததும் சிரில் ராட்க்ளிஃப் இந்தியாவை விட்டு கிளம்பினார். அவர் செல்வதற்கு முன் பிரிவினை தொடர்பான அனைத்து தரவுகளையும் அழித்துவிட்டார். அதன் பின் இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ அவர் வரவே இல்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு