சிரேஷ்ட  காவல்துறை  அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்று வியாழக்கிழமை  (14) இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய முறைப்பாபடுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து  100 மில்லியன் ரூபாவிற்கும்   அதிகமாக இலஞ்சம் பெற்றதாக  அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிதியானது  அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளிலும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பா்களின் கணக்குகளிலும்  வைப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ள நிலையில்  அவர் இன்று  கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.