காணொளிக் குறிப்பு, 7000 டாலர் மதிப்புள்ள லபுபு பொம்மைகள் திருட்டுபொம்மைகளின் விலை ரூ.6 லட்சம் – முகமூடி அணிந்து கொள்ளையடித்த நபர்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகளவில் லபுபு பொம்மைகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. இதனால் போலியான மற்றும் ஆபத்தான லபுபு பொம்மைகளும் சந்தையில் அதிகரித்து வருகின்றன. இவற்றில் கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் லபுபு பொம்மைகள் களவாடப்படுவதும் அதிகரித்து வருகிறது. லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் கடை ஒன்றில் 7000 டாலர் மதிப்புள்ள லபுபு பொம்மைகள் திருடப்பட்டுள்ளன. மூகமுடி அணிந்த கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இவை உண்மை விலையை விட அதிக விலைக்கு இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு