🧘‍♂️   அமெரிக்காவில் புத்த பிக்குகளின் அமைதிப் பயணம் :  – Global Tamil News

by ilankai

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் சுமார் 2,300 மைல்கள் (3,700 கி.மீ) தூரத்தை இலக்காகக் கொண்டு, புத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ‘அமைதிப் பயணம்’ (Walk for Peace) தற்போது உலகெங்கும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. வன்முறை மற்றும் அரசியல் பிளவுகளால் பிளவுபட்டுள்ள சமூகத்திற்கு அமைதியையும், கருணையையும் போதிப்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆன்மீகப் பயணம் வெறும் நடைப்பயணம் மட்டுமல்ல, இது சகிப்புத்தன்மை மற்றும் மன உறுதியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அமைதியின் தூதுவன் (The Peace Dog)இந்த யாத்திரையில் பிக்குகளுடன் இணைந்து நடந்து செல்லும் ‘அலோகா’ (Aloka) என்ற நாய் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமஸ்கிருதத்தில் ‘அலோகா’ என்றால் ‘ஒளி’ என்று பொருள். இந்தியாவில் ஒரு பயணத்தின் போது பிக்குகளுடன் இணைந்த இந்த நாய், தற்போது அமெரிக்காவிலும் அவர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து வருகிறது.📝 பயணத்தின் முக்கிய அம்சமாகப் பாா்க்கப்படுகின்றது கடந்த 2025 ஒக்டோபர் 26, டெக்சாஸ் (Texas) இல் ஆரம்பமான இந்த பயணம் எதிா்வரும் 2026 பெப்ரவரி 13ம் திகதி , வோஷிங்டன் டி.சி. (Washington D.C.)முடிவடையும். இதில் டெக்சாஸ் ஹுவாங் தாவோ ஆலயத்தைச் சேர்ந்த 19 வியட்நாமிய-அமெரிக்க பிக்குகள் பற்கேற்றுள்ளனா். புத்தரின் பிறந்தநாள் மற்றும் ஞானம் பெற்ற தினமான ‘வைகாசி விசாகத்தை’ (Vesak) அமெரிக்காவின் தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோருவது முக்கியமான கோாிக்கையாகவுள்ளது. இந்த நீண்ட பயணத்தின் போது ஒரு பாரிய விபத்து ஏற்பட்டது. டெக்சாஸ் நெடுஞ்சாலையில் பிக்குகளுக்குப் பின்னால் வந்த பாதுகாப்பு வாகனம் மீது ஒரு லொறி மோதியதில், ஒரு பிக்கு தனது காலை இழக்க நேரிட்டது. இருப்பினும், அந்த பிக்குவின் வேண்டுகோளுக்கிணங்க, எஞ்சிய பிக்குகள் மனந்தளராமல் தங்களது அமைதிப் பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர் வெள்ளை நிற மற்றும் காவி நிற ஆடைகளை அணிந்த இந்த பிக்குகள், தினமும் அதிகாலை முதல் இரவு வரை அமைதியாக நடந்து செல்கின்றனர். வழியில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்கள், பண்ணை வீடுகள் மற்றும் நகர சபைகள் இவர்களுக்குத் தங்குமிடமும் உணவும் வழங்கி ஆதரவளித்து வருகின்றன Tag Words:#WalkForPeace #BuddhistMonks #AlokaTheDog #PeacePilgrimage #VesakHoliday #USA2026 #SpiritualJourney #TexasToDC #UnityAndCompassion

Related Posts