பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, இலங்கையில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் பட்டியலில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த திருத்தப்பட்ட பட்டியலில், அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியைச் சேர்ந்த ‘சுப்பர் முஸ்லிம்’ (Super Muslim) அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் (Dr. K.L.M. Raees) என்பவரது பெயர் உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளைக் கண்டறிந்து தடை செய்யும் நடைமுறைக்கமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகள்! கடந்த 2021.04.13 அன்று அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 11 இஸ்லாமிய அமைப்புகள் இலங்கையில் தடை செய்யப்பட்டன. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ) ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ) அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ) ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) தாறுல் அதர் (மற்றும் அதன் கிளை நிறுவனங்கள்) ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM / ஜம்இய்யா) சேவ் த பேர்ள்ஸ் (Save the Pearls) சுப்பர் முஸ்லிம் (Super Muslim) குறித்த அமைப்புகள் அல்லது நபர்களுடன் தொடர்பு வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். வர்த்தமானி அறிவித்தலின் படி பின்வருவனவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது: அந்த அமைப்புகளில் உறுப்பினராக இருத்தல் அல்லது தலைமை தாங்குதல். சீருடை, சின்னம், கொடி அல்லது அடையாளங்களை அணிதல் அல்லது வைத்திருத்தல். கூட்டங்களை கூட்டுதல், நடத்துதல் அல்லது அவற்றில் கலந்து கொள்ளுதல். உறுப்பினர்களுக்கு புகலிடம் அளித்தல் அல்லது மறைத்து வைத்தல். பண உதவி, நன்கொடை அல்லது பொருட்களை வழங்குதல். அமைப்பின் கருத்துக்களைப் பரப்புதல் அல்லது அதன் சார்பில் செயற்படுதல். இந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தமானியில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
🚨பயங்கரவாத தடைப் பட்டியலில் கல்முனை டாக்டர் ரயீஸ் மற்றும் 11 அமைப்புகள்! 🚨 – Global Tamil News
4