Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Chetan Singh
படக்குறிப்பு, ரஷ்ய எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடுதல் வரிகளை விதித்துள்ளார் டிரம்ப்எழுதியவர், ஜாஸ்மின் நிஹாலினிபதவி, பிபிசி செய்தியாளர்43 நிமிடங்களுக்கு முன்னர்
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் ரஷ்ய எண்ணெயின் இறக்குமதி பல நூறு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு பல பில்லியன் டாலர்கள் மிச்சமாகியுள்ளன. ஆனால் இதன் பலன் யாருக்கு கிடைத்தது என்கிற கேள்வியும் எழுகிறது. தற்போது டிரம்பின் வரி விதிப்பால் இந்தியா தனது ரஷ்ய கொள்கையை மாற்றுமா? அதற்கும் விலைவாசிக்கும் தொடர்பு உள்ளதா?
2024-2025 நிதியாண்டியில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெயின் பங்கு 35% ஆக இருந்தது. சலுகை விலையில் வாங்கியதால் முந்தைய நிதியாண்டில் இந்தியாவின் இறக்குமதி செலவில் 8.2 பில்லியன் டாலர் குறைந்தது.
ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்ததற்காக இந்தியா மீது அமெரிக்கா மிக அதிக அளவிலான வரியை விதித்துள்ளது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் அது இந்தியாவின் எரிபொருள் செலவை அதிகரிக்கலாம். அண்மை வருடங்களில், குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்கியதில் இந்தியா பல பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தியது. ஆனாலும், நுகர்வோரான பொதுமக்களுக்கு பெட்ரோலின் விலை குறையவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சீனா, துருக்கியை விட இந்தியா மீதே அமெரிக்கா கூடுதல் வரிகளைப் விதித்துள்ளது. ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைமுறைக்கு வரும் இந்த உத்தரவு, இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான மொத்த வரியை 50% ஆக அதிகரிக்கும். இது அமெரிக்காவால் விதிக்கப்படும் வரிகளில் மிகவும் அதிகமான ஒன்றாகும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த நடவடிக்கை, “நேர்மையற்றது, நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” என இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளித்தது.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2025 ஜூன் வரை, சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள்தான் ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடுகளாக உள்ளதாக சென்டர் ஃபார் ரிசர்ச் ஆன் எனர்ஜி அண்ட் கிளீன் ஏர் (Centre for Research on Energy and Clean Air) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், இந்தியாவிற்கு மட்டும் மிக அதிக வரியை அமெரிக்கா விதித்துள்ளது. சீனாவிற்கு 30% வரியும், துருக்கிக்கு 15% வரியும் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் 18% பங்கு அமெரிக்காவுக்கானதாக இருந்தது.
ஆனால், டிரம்ப் அறிவித்துள்ள அதிகப்படியான வரிகள் இந்தியாவை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் பாதகமான நிலைக்கு தள்ளுகிறது. உதாரணமாக, வியட்நாம் மற்றும் வங்கதேசம் ஆகியவை அமெரிக்காவின் ஜவுளி வர்த்தகத்தில் கணிசமான பங்கு வகிக்கின்றன, ஆனால் இந்தியாவின் 50% வரியுடன் ஒப்பிடுகையில் அவற்றின் ஏற்றுமதிகளுக்கு 20% வரி மட்டுமே விதிக்கப்படுகிறது.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. நாட்டின் எண்ணெய் தேவையில் சுமார் 85% இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.
யுக்ரேன் போருக்கு முன்பு, இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியின் பெரும்பகுதிக்கு மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்திருந்தது. 2018 நிதியாண்டில் ரஷ்யாவின் பங்கு 1.3% என்கிற அளவில் மிகக் குறைவாக இருந்தது.
யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு இது மாறியது. ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்றதால், அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்தது. 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 35% ஆக உயர்ந்தது. ஐசிஆர்ஏ (ICRA) மதிப்பீடுகளின்படி, ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எண்ணெய் வாங்கியது இந்தியாவின் இறக்குமதி செலவில் 2023 நிதியாண்டில் 5.1 பில்லியன் டாலரையும், 2024 நிதியாண்டில் 8.2 பில்லியன் டாலரையும் மிச்சப்படுத்தியது.
இந்த மாற்றம் இந்தியாவின் கச்சா எண்ணெய் விலையை (இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான அரசாங்கத்தின் அளவுகோல்) 2022 மார்ச்சில் ஒரு பீப்பாய்க்கு 112.87 டாலரில் இருந்து 2025 மே மாதத்தில் 64 டாலராக குறைத்தது.
ஆனால், கச்சா எண்ணெய் மலிவாக இருந்தபோதிலும், டெல்லியில் பெட்ரோலின் சராசரி சில்லறை விலை கடந்த 17 மாதங்களாக ஒரு லிட்டருக்கு ரூ.94.7 என நிலையாக உள்ளது. அதாவது கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் பலன் நுகர்வோரை ஒருபோதும் சென்றடையவில்லை.
பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விலை நான்கு கூறுகளைக் கொண்டுள்ளது. டீலர்களிடம் வசூலிக்கப்படும் விலை, டீலர் கமிஷன், கலால் வரி, மற்றும் மதிப்பு கூட்டு வரி (VAT).
2025 ஜனவரியில், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.77 ஆக இருந்தது. இதில் ரூ.55.08 டீலர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை, ரூ.4.39 டீலர் கமிஷன், ரூ.19.90 கலால் வரி, மற்றும் ரூ.15.40 மதிப்பு கூட்டு வரி ஆகியவை அடங்கும். 2025 ஜூலைக்குள், டீலர் விலை ரூ.53.07 ஆக குறைந்தது, ஆனால் கலால் வரி ரூ.21.9 ஆக உயர்ந்ததால் சில்லறை விலைகள் மாறாமல் இருந்தன.
2025 நிதியாண்டில் பெட்ரோலியத் துறை வசூலித்த கலால் வரி மூலம் மத்திய அரசு ரூ.2.72 லட்சம் கோடி வருவாயைப் பெற்றது. மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியாக ரூ.3.02 லட்சம் கோடி வசூலித்தன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசின் கலால் வரி வசூல் இன்னும் உயர்ந்து. 2021 நிதியாண்டில் எரிபொருள் விலைகள் சரிந்தபோது கலால் வசூல் ரூ.3.73 லட்சம் கோடியாக உச்சமடைந்தது.
2025-26ம் நிதியாண்டின் மீதமுள்ள காலத்தில் இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால், எரிபொருள் செலவு 9.1 பில்லியன் டாலராகவும், அடுத்த நிதியாண்டில் 11.7 பில்லியன் டாலராகவும் உயரும் என்று எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராஉள்நாட்டு பணவீக்கத்தில் இதனால் பெரிய தாக்கம் ஏற்படும் என்று தான் கருதவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
“விலைகளில் அதன் தாக்கம் என்ன, உலகளாவிய கச்சா எண்ணெய் பொருட்களின் விலைகள் என்ன, இவை அனைத்தையும் பொறுத்து இருக்கும். மற்றொரு விஷயம், (விலை) கீழ்நோக்கியோ அல்லது மேல்நோக்கியோ நகரும் போது ஏற்படும் தாக்கத்தை, அரசு கலால் வரிகள் மற்றும் பிற வரிகள் மூலம் எவ்வளவு உள்வாங்கிக் கொள்கிறது என்பதைப் பொறுத்து இருக்கும். எனவே, இப்போதைக்கு இதனால் பணவீக்கத்தில் பெரிய தாக்கம் ஏற்படும் என்று நாங்கள் கருதவில்லை, ஏனெனில் எந்தவொரு அதிர்ச்சி ஏற்பட்டாலும் அரசு நிதி அம்சத்தில் பொருத்தமான முடிவை எடுக்கும் என்று நினைக்கிறேன்,” என்று மல்ஹோத்ரா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இந்தியா மீதான டிரம்பின் 50% வரி அமெரிக்க மக்களையும் பாதிக்குமா?
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், அந்த அளவு எண்ணெய் உலகளாவிய சப்ளை கட்டமைப்பில் இருந்து திடீரென மறைந்துவிடும், இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது என புது டெல்லியை தளமாகக் கொண்ட புதிய சிந்தனைக்குழுவான இன்டிபென்டன்ட் எனர்ஜி பாலிசி இன்ஸ்டிட்யூட்டின் தலைவர் நரேந்திர தனேஜா, பிபிசியிடம் கூறினார். “இது, நிச்சயமாக இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யும் அளவு கச்சா எண்ணெய் சர்வதேச சப்ளை கட்டமைப்பிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டால், வேறு எந்த சந்தையும் அந்த தேவையை பூர்த்தி செய்யமுடியாது எனவும் அவர் கூறுகிறார்.
“எனவே விலை கண்டிப்பாக மேலே போகப்போகிறது. எந்த அளவிற்கு உயரும் என்பதைக் கூறுவது கடினம். ஆனால், ஒரு விஷயம் மிகவும் தெளிவாக உள்ளது. இது உலகம் முழுவதிலும் பெரும்பாலான நுகர்வோரை பாதிக்கும். அதிலும் குறிப்பாக அமெரிக்க நுகர்வோரான பொதுமக்களையும் பாதிக்கும்.” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு