காணொளி: யானைகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருவது ஏன்?காணொளிக் குறிப்பு, உலகளவில் குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கைகாணொளி: யானைகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருவது ஏன்?

5 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த சில பத்தாண்டுகளில் யானைகளின் வாழ்விடங்களில் பெருமளவு அழிந்துவிட்டன. யானைகளைப் பாதுகாக்க பல வனவிலங்கு அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் ஆப்ரிக்க மற்றும் ஆசிய யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.

யானைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதால் அவை உணவு தேடி கிராமங்களுக்குள்ளும் விலை நிலங்களுக்குள்ளும் வருகின்றன. இதனால் யானை-மனித மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

யானைகள் வேட்டையாடப்படுவது தற்போதும் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. 1979-இல் இருந்து ஆப்ரிக்க யானைகளின் வாழ்விடங்கள் 50 சதவீதம் சுருங்கிவிட்டன. ஆசிய யானைகளின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகளில் தற்போது 15 சதவீதமே எஞ்சியுள்ளன.

ஆப்ரிக்காவில் 415,000 யானைகள் மட்டுமே உள்ளன… ஆசியாவில் 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் யானைகள் வரை மட்டுமே உள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு