யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பான விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் யாழ் . மாவட்ட செயலரை சந்தித்து கேட்டறிந்து கொண்டுள்ளார்.  யாழ் . மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , மாவட்ட செயலர் ம. பிரதீபனை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் போது, பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், நெடுந்தீவின் வீதி புனரமைப்பு,  சுற்றுலா அபிவிருத்தி, மாவட்ட அபிவிருத்தி மற்றும் குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பான விபரங்களை கேட்டறிந்து கொண்டார்.

அதேவேளை குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த சனிக்கிழமை  குறிகட்டுவான் இறங்குதுறைக்கு  துறைசார் அதிகாரிகளுடன் நேரடியாக பயணம் செய்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.