இன அழிப்பு விவகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்  நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் முன்னெடுத்து வந்திருந்த நிலையில் அது கைவிடப்பட்டுள்ளதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.

இன அழிப்பு எதிர்ப்பு கருத்துக்கள் என்பது, ஜெனிவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் இல்லை என விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன.

இன அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுத்து, போர்க்குற்றம் – மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பதற்கு இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்தில் வைத்துக் கோரி இருந்தால், எம்.ஏ.சுமந்திரன் நிலைப்பாடு தெரிந்ததே.

இந்நிலையில்  கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகிய இருவரும் இலங்கை நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் நிகழ்த்திய உரைகளின் போது கூறிய ”இன அழிப்பு” என்பது, உயிரோட்டமாகவும் முதன்மையாகவும் ஜநாவிற்கு அனுப்பிய கடிதத்தில் இல்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஜெனீவாவுக்கு கடிதம் அனுப்பும் “பணி“ – “பொறுப்பு“ அமெரிக்க தூதரக பின்னணி நபர்களுடையதாவென்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக அமைப்புகள் என்று அழைக்கப்படும் தனிப்பட்ட நபர்களிடம் பொறுப்பை சுமத்தவா தமிழ்த்தேசிய பேரவை உருவானது என்ற கேள்வி எழுந்துள்ளது.