Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டை வீசியதும் வீரர்கள் கீழே கண்ட காட்சி என்ன? விமானக் குழுவின் அனுபவம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது எனோலா கே விமானம் அணுகுண்டு வீசியதை சித்தரிக்கும் படம்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி இந்திஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவில் உள்ள அலமோகோர்டோ குண்டுவீச்சு தளம் முதல் அணுகுண்டு சோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த விஷயம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், அப்போதைய அமெரிக்க துணை அதிபர் ஹாரி ட்ரூமனுக்கு கூட இது குறித்து தெரியாது.
அமெரிக்க அதிபராக பதவி வகித்த ரூஸ்வெல்ட் இறந்த 24 மணி நேரத்துக்குப் பிறகுதான், அமெரிக்கா மிகவும் அழிவுகரமான அணுகுண்டை உருவாக்கும் திட்டத்தில் செயல்பட்டு வரும் தகவல் ஹாரி ட்ரூமனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
1945 ஜூலை 15ஆம் நாளன்று, அணுகுண்டை உருவாக்கிய ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் மற்றும் மன்ஹாட்டன் திட்ட இயக்குநர் லெஸ்லி க்ரோவ்ஸ் இருவரும், பதுங்கு குழியில் அணுகுண்டு சோதனை செய்வதற்கான அனுமதிக்காகக் காத்திருந்தனர். அன்று, அலமோகோர்டோ குண்டுவீச்சு தளம் உள்ள பகுதியில் கடுமையான புயல் வீசியது.
இயன் மெக்கிரேகர் தனது ‘தி ஹிரோஷிமா மென்’ என்ற புத்தகத்தில், “1945 ஜூலை 16 அன்று, அதிகாலை 5:30 மணிக்கு, முதல் அணுகுண்டு சோதனை செய்யப்பட்டது. அந்த அதிகாலை வேளையில், நியூ மெக்ஸிகோவின் பாலைவனம் நண்பகல் போல பிரகாசித்தது.”
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“லெஸ்லி க்ரோவ்ஸ் தனது சகாக்களான வன்னேவர் புஷ் மற்றும் ஜேம்ஸ் கோனன்ட் ஆகியோருடன் கைகுலுக்கினார். ‘உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’ என்று ஓப்பன்ஹெய்மரை வாழ்த்திய அவர், அமெரிக்கா நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அணுகுண்டு இறுதியாக நமக்கு கிடைத்துவிட்டது.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1945 ஜூலை 16-ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டை பரிசோதித்து பார்த்ததுஅதேநேரத்தில், க்ரோவ்ஸ் தனது அறிக்கையை போர் செயலாளர் ஹென்றி ஸ்டிம்சனுக்கு சங்கேத மொழியில் அனுப்பினார். ஸ்டிம்சன் அதை அதிபர் ட்ரூமனுக்கு வாசித்துக் காட்டினார். 24 மணி நேரத்துக்குள், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை எந்த நேரத்திலும் அணுகுண்டு பயன்படுத்தப்படலாம் என்ற செய்தி இருவருக்கும் கிடைத்தது.
ஆகஸ்ட் 6ஆம் தேதி அணுகுண்டை வீசலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
1945 ஜூலை 26-ஆம் நாளன்று ஜப்பானை எச்சரித்த ஹாரி ட்ரூமன், நிபந்தனையின்றி சரணடையவில்லை என்றால், கற்பனைகூட செய்ய முடியாத அழிவுக்கு ஜப்பான் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த எச்சரிக்கைக்கு ஜப்பான் செவிசாய்க்கவில்லை என்பதால், அந்நாட்டின் மீது அணுகுண்டு வீச முடிவு செய்யப்பட்டது.
அணுகுண்டு வீசும் பணிக்கு ‘மிஷன் எண்-13’ என்று பெயரிடப்பட்டது. ஆகஸ்ட் 6ஆம் தேதி குண்டுவீச்சுக்கான நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான தலைவர் பால் டிபெட்ஸ் உடன் கலந்தாலோசித்த பிறகு, ஜெனரல் கர்டிஸ் லீமே, ஹிரோஷிமா, கோகுரா மற்றும் நாகசாகி ஆகிய மூன்று நகரங்களின் மீது குண்டு வீசலாம் என்று திட்டத்தை இறுதி செய்தார்.
அதற்கு முன்னதாக டிபெட்ஸ் குழுவினர் அணுகுண்டை வீசுவதற்கான ஒத்திகையை ஜூலை 31-ஆம் தேதி மேற்கொண்டனர்.
பட மூலாதாரம், Getty Images
ரிச்சர்ட் ரோட்ஸ் தனது ‘The Making of the Atomic Bomb’ என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “டினியன் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 15 பி-29 போர் விமானங்களில் மூன்று, போலி அணுகுண்டுகளுடன் புறப்பட்டன. அவை இவோ ஜிமா தீவைச் சுற்றி வந்து, போலி அணுகுண்டை கடலில் வீசிவிட்டு விமானத்தைத் திருப்பிக் கொண்டு செல்வதைப் பயிற்சி செய்தன. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜப்பானை வலுவான புயல் தாக்காமல் இருந்திருந்தால், அன்றைய தினமே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டிருக்கும்.”
ஜப்பானில் அணுகுண்டை வீசுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவின் 32 பிரதிகள் தயார் செய்யப்பட்டன.
பால் டிபெட்ஸ் பின்னொரு சமயம் ‘கிளாஸ்கோ ஹெரால்டு’ பத்திரிகையின் வில்லியம் லாவுடர் உடனான நேர்காணலின்போது அணுகுண்டு வீசிய அனுபவத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்.
“எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின் நகலை அலுவலகப் பெட்டகத்தில் வைத்து பூட்டி விட்டு, தொழில்நுட்பப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ‘எனோலா கே’ குண்டுவீச்சு விமானத்தை ஆய்வு செய்வதற்காக ஜெனரல் லெமேயுடன் சென்றேன். அந்த விமானம் தார்பாலினால் மூடப்பட்டு யாரும் பார்க்க முடியாதபடி வைக்கப்பட்டிருந்தது. தளத்தில் பணியில் இருந்த ஒரு சிப்பாய், உள்ளே செல்வதற்கு முன்பு சுருட்டு மற்றும் தீப்பெட்டியை ஒப்படைக்குமாறு அந்த இடத்தின் மூத்த அதிகாரியான ஜெனரல் லெமேயை அறிவுறுத்தியதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அணுகுண்டை சுமந்து சென்ற விமானம் எனோலா கே
பட மூலாதாரம், SIMON & SCHUSTER
படக்குறிப்பு, அணுகுண்டை வீசுவதற்கு முன்பு இறுதி விளக்கத்தை அளித்த பால் டிபெட்ஸ்விமானப் பணிக்குழு கூட்டத்தை கூட்டிய டிபெட்ஸ்
டிபெட்ஸின் கண்ணெதிரே ‘எனோலா கே’ குண்டுவீச்சு விமானத்தின் வெடிகுண்டு வைக்கும் இடத்தில் தொழில்நுட்ப ஊழியர்கள் மிகவும் கவனமாக அணுகுண்டை வைத்தனர். அன்று மாலை, டிபெட்ஸ் அந்த பணியுடன் தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.
இந்தப் பணியுடன் தொடர்புடைய தியோடர் வான் கிர்க், பின்னொரு சமயம் நியூ ஆர்லியன்ஸில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு அளித்த பேட்டியில், “அது ஒரு முக்கியமான கூட்டம், அந்தக் கூட்டத்தில் யார் எந்தப் பணியில் ஈடுபடுவது, எந்த கட்டத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது போன்ற பல விஷயங்களை முடிவு செய்ய வேண்டியிருந்தது” என்று கூறினார்.
“பயன்படுத்தப் போகும் ஆயுதம் சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக டிபெட்ஸ் சொன்னார். தற்போது அந்த ஆயுதத்தை எதிரிக்கு எதிராகப் பயன்படுத்துவோம் என்று சொன்ன அவர், எங்கள் அனைவரையும் சற்று நேரம் உறங்கச் சொன்னார். இரவு 10 மணிக்குப் பிறகு இறுதியான விளக்கக் கூட்டத்துக்கு அழைப்பதாக அவர் சொன்னார். ஆனால், அணுகுண்டை வீசப் போகிறவர்களால் எப்படி தூங்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை” என்று தியோடர் வான் கிர்க் தெரிவித்தார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பால் டிபெட்ஸ் உரை
இதற்கிடையில், ‘எனோலா கே’ விமானத்துக்கான ரகசிய குறியீடு ‘விக்டர்’ என்பதற்குப் பதிலாக ‘டிம்பிள்ஸ்’ என்று இருக்கும் என்று டிபெட்ஸ் முடிவு செய்தார்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் விமானத்தை ஐந்தாயிரம் அடி உயரத்தில் வைத்திருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், ‘எனோலா கே’ செல்லும் வழியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஏதேனும் காரணத்தால் அணுகுண்டை சுமந்து செல்லும் ‘எனோலா கே’ விமானம் கடலில் விழுந்தால், அதை உடனடியாக அங்கிருந்து மீட்பதற்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
11 மணிக்கு குழு உறுப்பினர்கள் அனைவரும் இறுதி விளக்கத்துக்காக கூடியிருந்தனர். தனது ‘Mission: Hiroshima’ என்ற புத்தகத்தில் பால் டிபெட்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நான் அவர்களிடம் உரையாற்றினேன், இவ்வளவு நாளாக இந்த இரவுக்காகத் தான் நாம் காத்துக்கொண்டிருந்தோம் என்று சொன்னேன்.”
“கடந்த மாதங்களில் நாம் பெற்ற அனைத்து பயிற்சிகளையும் இப்போது பயன்படுத்துவோம். நமது பணியில் வெற்றி பெற்றோமா அல்லது தோல்வியடைந்தோமா என்பது இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும். நீங்கள் இதுவரை பார்த்த மற்றும் செய்த பணிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பணியான அணுகுண்டை வீசும் பணியை மேற்கொள்கிறோம். இந்த அணுகுண்டு 20 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான டிஎன்டி ஆற்றல் கொண்டது.”
பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images
எனோலா கே-வுக்கு முன்னர் அனுப்பப்பட்ட 3 விமானங்கள்
இதன் பிறகு, அனைவருக்கும் போலராய்டு லென்ஸ்கள் கொண்ட சிறப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அவை வெல்டர்கள் அணியும் கண்ணாடிகளைப் போலவே இருந்தன.
“அணுகுண்டு வீசப்பட்டதும் எழும் வெளிச்சத்தால் கண் பார்வை பறிபோகாமல் இருக்க இந்தக் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும் என்று மன்ஹாட்டன் திட்டத்தின் பேராசிரியர் ராம்சே கூறினார். கூட்டம் முடிந்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உணவகத்துக்குச் சென்ற அனைவரும் காலை உணவாக முட்டை, இறைச்சி, வெண்ணெய், ரொட்டியை உண்டனர், காபியும் பருகினார்கள். குழுவினர் அனைவரும் காலை உணவு உட்கொண்டபோது, குழுவின் தலைவர் பால் டிபெட்ஸ், யாருக்கும் தெரியாமல் தனது சட்டைப் பையில் பொட்டாசியம் சயனைடு மாத்திரைகளை பத்திரமாக வைத்தார்” என்று இயன் மெக்கிரெகர் எழுதினார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, ‘Straight Flush’, ‘Jabbit Third’, ‘Full House’ ஆகிய மூன்று விமானங்கள் வானிலை பற்றிய தகவல்களைச் சேகரிக்க புறப்படும் ஓசை கேட்டது.
ஜப்பான் மீது அணுகுண்டு வீசும் பணி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, முக்கிய இலக்கில் தற்போதைய வானிலை நிலைமைகள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக இவை இலக்கை நோக்கி பறந்தன.
பட மூலாதாரம், CONSTABLE
படக்குறிப்பு, இயன் மெக்கிரேகர் எழுதிய ‘The Hiroshima Men’ புத்தகம் அதிகாலை 2:45 மணிக்கு புறப்பட்ட ‘எனோலா கே’
‘எனோலா கே’வில் பயணித்தவர்கள், அதிகாலை 1:45 மணிக்கு காபி குடித்த பிறகு ஜீப்பில் ஏறி ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை நோக்கிச் சென்றனர். அந்த இடம் பகல் போல வெளிச்சமாக இருந்தது. விமானத்தளத்தில் இருந்த பிற பணியாளர்கள், எனோலா கே விமானத்தில் பயணிக்கும் குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மன்ஹாட்டன் திட்டத்தின் அனைத்து மூத்த உறுப்பினர்களும் அங்கு இருந்தனர்.
“விமானத்தில் சமநிலையை பராமரிக்க பின்புறத்தில் பெட்ரோல் பீப்பாய்கள் ஏற்றப்பட்டன. அதிகாலை 2:45 மணிக்கு விமானம் புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர் பில் லாரன்ஸ் உட்பட சுமார் 100 பேர் பார்த்துக் கொண்டிருந்த அந்த இரவு வேளையில், டிபெட்ஸ்-இன் மேற்பார்வையில் குழுவினர் விமானத்தில் ஏறினார்கள்” என்று இயன் மெக்கிரெகர் தனது ‘The Hiroshima Men’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“துணை விமானி ராபர்ட் லூயிஸ் விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றதும், ‘உன் கைகளை கட்டுப்பாட்டு அமைப்பில் இருந்து விலக்கி வை. நான் விமானத்தை ஓட்டுகிறேன்'” என்று டிபெட்ஸ் கூறிவிட்டார்.
“தனக்கு முன்னால் இருந்த எட்டாயிரத்து ஐநூறு அடி நீள ஓடுபாதையைப் பார்த்த டிபெட்ஸ், அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்வதற்காக தனது குழுவினரிடம் பேசினார்” என்று இயன் மெக்கிரேகர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்ட டிபெட்ஸ் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு, “‘டிம்பிள்ஸ் 82 டு நார்த் டினியன் டவர். புறப்படத் தயாராகிவிட்டோம்” என்றார். அதற்கு ஒரு வினாடிக்குள் பதில் வந்தது, டிம்பிள்ஸ் 82, டிம்பிள்ஸ் 82. புறப்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.”
“ஹிரோஷிமா மீது முதல் அணுகுண்டை வீசும் பணி தொடங்கிவிட்டது. எனோலா கே வானில் பறந்தபோது, கண்காணிப்பு உபகரணங்களை ஏந்திய மேலும் மூன்று B-29 விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதனைப் பின்தொடர்ந்தன. அதில் ‘Necessary Evil’ என்ற விமானத்தின் கேப்டன் ஜார்ஜ் மார்குவார்ட்டுக்கு அணுகுண்டு வீசுவது மற்றும் அதன் தாக்கங்களை புகைப்படம் எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது,” என்று இயன் மெக்கிரேகர் ‘The Hiroshima Men’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசிய குழுவினர்ஜப்பான் மீது முதல் அணுகுண்டு வீச்சு
குறித்த இலக்கை அடைய ஆறு மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும். தாங்கள் நீண்ட நேர பயணம் செய்யவேண்டும் என்பதை ‘எனோலா கே’ விமானத்தில் பயணித்தவர்கள் அறிந்திருந்தனர். விமானம் இவோ ஜிமாவை அடைந்ததும், விமானத்தில் வைக்கப்பட்டிருந்த ‘லிட்டில் பாய்’ அணுகுண்டை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக விமானத்தில் இருந்த வில்லியம் பார்சன்ஸ் மற்றும் மோரிஸ் ஜெப்சன் தெரிவித்தனர்.
பச்சை நிற பிளக்கை அகற்றி சிவப்பு வண்ண பிளக்கைப் போடுவதை அவர்கள் பலமுறை பயிற்சி செய்திருந்தாலும், அதைச் செய்ய வேண்டிய உண்மையான நேரம் வந்த போது, அவர்களுக்கு வியர்த்துப் போனது.
கன்சோலுக்கு வந்த பார்சன்ஸ், குண்டு செயல்படுத்தப்பட்டதாக டிபெட்ஸிடம் தெரிவித்தார். “இதைக் கேட்டதும், டிபெட்ஸ் ‘எனோலா கே’வை 30 ஆயிரம் அடி உயரத்துக்கு எடுத்துச் சென்றார். அங்கிருந்து 100 மைல் தொலைவில் ஜப்பானின் கடற்கரையை பார்க்க முடிந்தது. ஹிரோஷிமா நகரத்தையும் 75 மைல் தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது” என்று பின்னர் ஒரு சமயம் வான் கிர்க் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறினார்.
“இதற்கிடையில், விமானக் குழுவினர் பேசுவதை நிறுத்திவிட்டு, அனைவரும் அமைதியாகிவிட்டனர். அங்கு நிலவிய கனத்த மௌனத்தைக் கலைத்த டிபெட்ஸ், அனைவரும் கண்ணாடி அணிய வேண்டும் என்று கூறினார். இதற்குப் பிறகு, விமானம் 360 டிகிரி திருப்பத்தை எடுத்தது, 6 நிமிடங்கள் 15 வினாடிகளில் விமானம் திருப்பப்பட்டது, நாங்கள் நேராக ஹிரோஷிமா நோக்கிச் சென்றோம்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அணுகுண்டை சுமந்து சென்ற விமானம்குண்டுவெடிப்பும் ரேடியோ சிக்னலும்
T-வடிவ அயோய் பாலத்தைப் பார்க்க முடிவதாக தாமஸ் ஃபேர்பி கூச்சலிட்ட போது, விமானம் இலக்கிலிருந்து 10 நிமிட தொலைவில் இருந்தது. அந்த நேரத்தில் திபெட்ஸ் விமானத்தை இயக்கும் பொறுப்பை ஃபேர்பியிடம் ஒப்படைத்தார்.
அணுகுண்டை வீசுவதற்கு இன்னும் சிறிது நேரமே இருந்த நிலையில், ‘Necessary Evil’ என்ற விமானத்தில் அமர்ந்திருந்தவர்கள், அணுகுண்டு கீழே வீசப்படுவதை எதிர்பார்த்துத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.
குழு உறுப்பினர் ரஸ்ஸல் கைகன்பாக் பின்னர் அளித்த ஒரு நேர்காணலில், “நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிக்னல் கிடைத்தது. அனைத்து ரேடியோ சிக்னல்களும் செயலிழக்கும் சமயத்தில் நாங்கள் அணுகுண்டை வீசவிருந்தோம். அதுதான் எங்கள் திட்டம்” என்று ரஸ்ஸல் கேக்கன்பாக் கூறினார்.
மேலும், “ரேடியோ சிக்னல் செயலிழந்தவுடன், அணுகுண்டு வைக்கப்பட்டிருந்த பகுதியின் கதவு திறக்கப்பட்டது, அணுகுண்டு கீழே செல்லத் தொடங்கியது. அந்த சமயத்தில் எங்கள் விமானத்தில் இருந்த விஞ்ஞானிகள் ‘ஸ்டாப் வாட்ச்’ கடிகார பொத்தானை அழுத்தினார்கள். சில விநாடிகளில் எங்கள் கேமராக்கள் புகைப்படங்களை எடுக்கத் தொடங்கின.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பால் டிபெட்ஸ், எனோலா கே விமானத்தின் தலைமை விமானிதரையிலிருந்து 1890 அடி உயரத்தில் வெடித்த அணுகுண்டு
இந்த விஷயத்தை பின்னர் ஒரு நேர்காணலில் வைன் கர்க் நினைவு கூர்ந்தார், “அணுகுண்டு விழுந்தவுடன், ‘எனோலா கே’ விமானம் முன்னோக்கி சாய்ந்தது. உடனடியாக விமானத்தை தானியங்கி நிலைக்குக் கொண்டு சென்ற பால், வெகுதொலைவுக்கு விமானத்தை கொண்டு செல்ல விரும்பினார். எனவே, விமானத்தை 160 டிகிரி வலப் புறமாகத் திருப்பத் தொடங்கினார். 43 வினாடிகளில் குண்டு வெடித்துவிடும், அங்கிருந்து தப்பிக்க எங்களிடம் இருந்த கால அவகாசமும் அவ்வளவுதான்.”
பட மூலாதாரம், Getty Images
பிரகாசமான வெளிச்சம் மற்றும் விமானத்தில் தடுமாற்றம்
“எங்கள் விமானத்தில் இருந்த அனைவரிடமும் கடிகாரம் இல்லை. நேரத்தை கணக்கிட, நாங்கள் 1001, 1002, 1003 என எண்ணத் தொடங்கினோம். அப்போது திடீரென பிரகாசமான ஒளி தோன்றியது, சில நொடிகளில் விமானம் குலுங்குவதை அதற்குள் இருந்த நாங்கள் உணர்ந்தோம். உலோகத் தாள் ஒன்று கிழிந்து போவது போன்ற விசித்திரமான சத்தமும் கேட்டது” என அணுகுண்டு வெடித்த சந்தர்பத்தை வைன் கர்க் நினைவு கூர்ந்தார்.
“என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துக்கொள்வதற்காக, நாங்கள் கீழே பார்த்தோம். நான் முதலில் கவனித்தது பெரிய வெள்ளை மேகங்கள் நாங்கள் குறி வைத்திருந்த இலக்கை நோக்கி கூடின, அவை மேல்நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தன. அந்த மேகங்களின் கீழ் பகுதியில் அடர்த்தியான புகை போர்வை நகரம் முழுவதையும் சூழ்ந்திருந்தது. அதற்கு கீழே எங்களுக்கு வேறு எதுவுமே தெரியவில்லை.”
“எங்கள் விமானம் நகரத்தைச் சுற்றி வரவில்லை. ஹிரோஷிமாவின் தென்கிழக்கே பறந்து, நாங்கள் புறப்பட்ட இடத்துக்கு திரும்பிச் செல்லத் தொடங்கினோம்.”
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘லிட்டில் பாய்’ அணுகுண்டுதிரும்பிய விமானம்
“82 V 670 Abil, Line, Line 2, Line 6, Line 9. Clear cut. We’re heading for base” என்று முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறியீட்டு செய்தி அனுப்பப்பட்டது.
அணுகுண்டு வீசப்பட்ட பிறகு, ‘எனோலா கே’ விமானம் மிகவும் பலமாக குலுங்கியது, விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் தாக்கப்படுவதாகவே விமானத்தில் இருந்தவர்களுக்கு தோன்றியது. ஆனால், அப்படி ஏதும் இல்லை என்று ஜார்ஜ் கரோன் உறுதியாகக் கூறினார். ஹிரோஷிமா நகரின் மேலே பறந்த அவர்களை தாக்க எந்த ஜப்பானிய விமானமும் வரவில்லை.
“நாங்கள் நிதானமாகவே கடலை நோக்கி விமானத்தைத் திருப்பினோம். திரும்பி வரும் வழியில் ஜப்பானுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றே நாங்கள் பேசிக் கொண்டுவந்தோம். ஏனெனில், அணுகுண்டு போன்ற ஆயுதத்தை எதிர்கொள்ளும் திறன் யாரிடமும் இல்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்” என்று டிபெட்ஸ் தனது சுயசரிதையில் எழுதினார்.
அச்சம் தந்த காட்சி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட பிறகு வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்எனோலா கே விமானத்தைத் தொடர்ந்து பறந்துவந்த விமானத்தில் இருந்த ரஸ்ஸல் கேக்கன்பாக், “வழக்கமாக குண்டுகளை வீசிய பிறகு, நாங்கள் தளத்துக்குத் திரும்பும்போது, மகிழ்ச்சியாக இருப்போம், நகைச்சுவையாக பேசிக் கொண்டிருப்போம், நல்ல மனநிலையில் இருப்போம். ஆனால் அன்று, விமானம் முழுவதும் அமைதி நிலவியது. யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று அன்றைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
“அணுகுண்டை வீசிவிட்டு எனோலா கே விமானத்தை திருப்பும் போது, வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு காட்சியைக் கண்டேன்” என்று டிபெட்ஸ் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.
“ஊதா நிறத்தில் மாபெரும் காளான் போல் உருவாகி, அது 45,000 அடி உயரத்தை எட்டியது. அதுவொரு பயங்கரமான காட்சி. பல மைல்கள் தொலைவில் நாங்கள் இருந்தாலும், அந்த காளான் எங்களை விழுங்கிவிடும் என்றே நாங்கள் ஒரு கணம் நினைத்துவிட்டோம். அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியவில்லை, ஹிரோஷிமா மக்களும் மறக்கவில்லை.”
இந்த அணுகுண்டு தாக்குதலில் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.
ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிய 3 நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9ஆம் நாளன்று, ஜப்பானின் மற்றொரு நகரமான நாகசாகி மீது இதேபோன்ற அணுகுண்டு வீசப்பட்டது.
அங்கே சுமார் 80 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு