வரலாற்றில் முதல்முறையாக, மருத்துவக் காரணங்களுக்காக விண்வெளி வீரர்களை அவசரமாக பூமிக்குத் திருப்பியனுப்ப நாசா (NASA) முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் விண்வெளி வீரர் ஒருவருக்குத் தீவிர உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக நாசா (NASA) தகவல் வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் சுற்றி வரும் விண்வெளி நிலையத்தில் உள்ள குழுவினர் மத்தியில் இந்த மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவக் காரணங்களுக்காகவும், தனிநபர் உரிமை (Medical Privacy) கருதி பாதிக்கப்பட்ட விண்வெளி வீரரின் பெயர் மற்றும் நோயின் தன்மை குறித்த விபரங்களை நாசா அல்லது சம்பந்தப்பட்ட விண்வெளி முகவர் நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட வீரரின் உடல்நிலை தற்போது சீராக (Stable) உள்ளதாகவும், அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள் விண்வெளி நிலையத்தில் உள்ள மருத்துவ வசதிகள் மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியில் உள்ள ஹூஸ்டன் கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் விண்வெளி மருத்துவ நிபுணர்கள் (Flight Surgeons) அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் தற்போது ‘சீராக’ (Stable) உள்ளார். ஆனால், விண்வெளியில் உள்ள மருத்துவ வசதிகளைக் கொண்டு துல்லியமான நோயறிதலைச் செய்ய முடியாது என்பதால், அவரை உடனடியாக பூமிக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ அவசர நிலை காரணமாக, விண்வெளி நிலையத்தில் திட்டமிடப்பட்டிருந்த சில ஆய்வுகள் மற்றும் வெளிப்புறப் பணிகள் (Spacewalks) தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. ஓகஸ்ட் 2025-இல் சென்ற குரூ-11 வீரர்கள், பெப்ரவரி 2026-இல் தான் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், தற்போது அவர்கள் அடுத்த சில நாட்களில் ஸ்பேஸ்எக்ஸ் ட்ராகன் (SpaceX Dragon) விண்கலம் மூலம் கலிபோர்னியா கடற்கரை ஓரம் தரையிறக்கப்படுவார்கள். வழக்கமாக பெப்ரவரி பாதியில் ஏவப்பட வேண்டிய குரூ-12 (Crew-12) விண்கலத்தை முன்கூட்டியே ஏவுவது குறித்து நாசா ஆலோசித்து வருகிறது. இதில் ஜெசிகா மீர் தலைமையிலான குழுவினர் பயணிப்பார்கள். ஜனவரி 8 மற்றும் 15 ஆகிய திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்த விண்வெளி நடைகள் (Spacewalks) காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. Tag Words: #ISSNews #NASA #SpaceX #AstronautHealth #MedicalEmergencySpace #SpaceStation #BreakingNewsSpace #CrewSafety
மருத்துவக் காரணங்களுக்காக விண்வெளி வீரர்கள்அவசரமாக பூமிக்கு திரும்புகின்றனா் – Global Tamil News
13
previous post