Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (11.08.25) திங்கட்கிழமை காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன் பிடித்தல் முகத்தில் இருந்து மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்களையும் ஒன்பது படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.
மீனவர்களின் இந்த தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை படவுடன் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (11) திங்கட்கிழமை காலை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது டன், சுமார் 20,000 மேற்பட்ட மீனவர்கள் நேரடியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் வரும் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும், 15ஆம் தேதி உண்ணாவிரத போராட்டமும், 19ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.