கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளநிலையில் ஆதரவாளர்கள் வெடிகொழுத்தி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். கம்பஹா நீதிமன்றத்தில் இன்று(09) முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளி ஒரவர் தொடர்பிலான விசாரணையின் போது, 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில், விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக இலங்கை இராணுவத்தால் துப்பாக்கி வழங்கப்பட்டநிலையில் அத்துப்பாக்கியே பாதாள உலக கும்பலிடமிருந்து மீட்கப்பட்டிருந்தது.
டக்ளஸிற்கு வெடிவரவேற்பு!
9